Mark Antony: காதை கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மனுக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் அபிநயா சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் திரைப்படத்தில் ஜோடியாகவும், அம்மாவும் நடித்து மிரட்டி உள்ளார்.
அபிநயா சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் சூட்டிங் என்பது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் நேற்று மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. நல்ல விமர்சனமும் கிடைத்து வருவதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜே.பி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் மொத்தம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாளில் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அபிநயா மார்க் ஆண்டனி படம் குறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, இதற்கு முன்பு அபிநயா விஷால் உடன் இணைந்து பூஜை திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டாவது முறையாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அபிநயா நீங்கள்தான் என்னுடைய ட்ரீம் ஹீரோ.. உங்களுடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷம் எனக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் ஹீரோயின் ரிது வர்மாவை விட அபிநயா கேரக்டர் தான் ரசிகர்களை பெரிதாக அளவிலும் கவர்ந்துள்ளது.