பொதுவாக சினிமாவில் நடிகர்களாக இருந்தாலும், நடிகைகளாக இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நடிப்பு திறமையும் தாண்டி தந்திரம் என்ற ஒன்று மிகவும் அவசியம்.
அந்தவகையில் ரசிகர்களை கவரும் வகையில் சில திறமைகள் இருந்தால் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட சில நடிகர்கள் தனது 60 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். ஆனால், சில நடிகர்கள் திறமை இருந்தும் அசால்ட் தனத்தினால் தனது மொத்த சினிமா கேரியரையும் இழந்து தற்போது பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருபவர்கள் பலர்.
அந்தவகையில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து அப்பொழுது மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.
முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வந்த இவர் சில திரைப்படங்களின் வாய்ப்புகளை வேண்டாம் என்று தவறவிட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்படங்களில் சுத்தமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது எனவே விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில்தான் ஹார்பிக் பாத்ரூம் விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இவர் இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் தற்போது சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் எங்கு இருக்கிறார் என்ன வேலை பார்க்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப பேட்டி ஒன்றில் அப்பாஸ் நியூஸிலாந்தில் இருப்பதாகவும், நான் ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனிக்காக வேலை செய்கிறேன், அதை நான் ரசித்தேன் அதன்பிறகு கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்க வேண்டிய இவர் தற்போது வேலை பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.