தமிழ் சினிமாவில் “சாக்லேட் பாயாக” கொடிகட்டி பறந்த அப்பாஸுக்கு.. இப்படி ஒரு நிலைமையா.? புகைப்படத்தை பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்

ABBAS
ABBAS

ஒரு நடிகர் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தால் தான் ரசிகர்களை உருவாக்க முடியும் அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகளை உருவாக்குவது ரொம்பவும் கஷ்டம். ஆனால் சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பெண் ரசிகைகளை உருவாக்கி  சாக்லேட் பாயாக வளம் வந்துள்ளனர் அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் அப்பாஸ்.

இவர் முதலில் காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அந்த படமே வெற்றி படமாக மாற பின் விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், காதல் வைரஸ், இனி எல்லாமே சுகமே, மலபார் போலீஸ் என தொடர்ந்து நடித்ததால் பெண் ரசிகைகள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

மேலும் சாக்லேட் பாயாக அப்பொழுது இருந்தார் இப்படி ஓடினாலும் நாளாப்போகில்  இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதை நன்கு உணர்ந்து கொண்ட அப்பாஸ் குடும்பத்தை ஓட்ட சாப்ட்வேர் இன்ஜினியராக நியூசிலாந்தில் வேலை பார்த்து தற்போது அங்கேயே செட்டில் ஆகி உள்ளார்.

இவர் 1997 ஆம் ஆண்டு erum ali என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றன. குடும்பத்துடன் தற்பொழுது வாழ்க்கையை அழகாக அனுபவித்து வருகிறார் இந்த நிலையில் அப்பாஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் புகாரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாஸ் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா எனக் கூறி  புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் மேலும் ஷேர் செய்து வருகின்றனர். இதோ நடிகர் அப்பாஸ் ஹாஸ்பிடல் இருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ABBAS
ABBAS
ABBAS
ABBAS