சினிமாவை பொறுத்தவரை ஏராளமான நடிகர்கள் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகைகள் ஒருவர் தான் நடிகர் அப்பாஸ் இவர் தமிழில் காதல் வைரஸ், இனியெல்லாம் சுகமே, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பெண் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக இடம் பிடித்தார்.
இப்படி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அது ஒரு கட்டத்தில் மிஸ் ஆனதால் பிறகு பிரபல நடிகர் நடித்து விட்டதாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மேலும் சின்னத் திரையிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விலகினார்.
தற்பொழுது இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள நிலையில் வீடியோ கால் மூலம் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்த அப்பாஸ் அதில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது தான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் இறுதியாக இந்த படத்தில் பிரசாத் நடித்தாராம்.
அதாவது இயக்குனர் சங்கர் அப்பாஸை சந்தித்து ஜீன்ஸ் படத்தின் கதையை கூறிய நிலையில் அந்தக் கதையும் அப்பாஸுக்கு பிடித்துப் போக ஓகே என கூறியுள்ளார் எனவே இதற்காக பத்து நாட்கள் அப்பாஸ் வெயிட் பண்ண ஆனால் அதற்குள் இந்த படத்தில் பிரசாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதாம் எனவே அதன் பிறகு அப்பாஸ் சங்கரிடம் இதனை பற்றி கேட்கவில்லை என கூறியுள்ளார்.
ஜீன்ஸ் படம் 1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியானது இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார் மேலும் நாசர், ராஜூ சுந்தரம், லக்ஷ்மி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருந்தாலும் நல்லா இருந்திருக்கும்.