Actor Abbas: நடிகர் அப்பாஸ் விஷால் குறித்து பேசி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அப்பாஸ் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார் அந்த வகையில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் பலரும் இவருக்கென இருந்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் பொழுது எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான்.
ஆனால் நான் அதற்காக வெளிநாடு போகவில்லை அந்த சமயத்தில் நான் சில விழாக்கள் எடுத்து நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் சிசிஎல் நடத்துவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சிசிஎல் நடத்த ஸ்பான்சர் கிடைக்கவில்லை எனவே போட்டியை நிறுத்தி விடலாம் என்று திட்டமிட்டார்கள். வேண்டாம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்குங்கள் என்று கூறிவிட்டு பாம்பேயில் சல்மான் கானிடமும், ஆந்திராவில் நடிகர் வெங்கடேஷிடமும், கர்நாடகாவில் நடிகர் சுதீப்பிடமும் இது பற்றி பேசி பாலிவுட் vs தென்னிந்தியா என்ற அடிப்படையில் முதலில் போட்டி நடத்தினோம்.
இதனை ரசிகர்கள் இலவசமாக பார்த்தனர் அந்த போட்டியை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. செலிப்ரட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் பொழுது எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் நான் அதற்காக நான் வெளிநாடு போகவில்லை இரண்டு முறை சிசிஎல் போட்டியில் நான் பங்கேற்று இருந்தேன்.
மூன்றாவது முறை வெளியேறிவிட்டேன் அதற்கு காரணம் விஷால் தான். சரியாக என்னை அவர் நடத்தவில்லை அதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் யாரோ அவரின் தலையில் விஷத்தை ஏற்றி விட்டனர். அதனால் அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு மற்றவர்களிடமும் என்னை பற்றி தவறாக கூறி வந்தார்கள்.
எனவே நான் அதிலிருந்து விலகி விட்டேன் நான் எல்லாம் மாநில நடிகர்களையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பேன். இந்த பிரச்சனையினால் அணியில் சகோதரத்துவம், கலகலப்பு எல்லாம் போய்விட்டது. எனவே நானும் வெளியேறி விட்டேன் அதன் பிறகு விஷாலிடம் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.