சாக்லேட் பாய் போல இருக்கும் நம்ம அப்பாஸ்க்கு 21 வயதில் மகளா..? இணையத்தில் வைரலாகும் அப்பாஸ் மகளின் புகைப்படம்..!

abbas

abbas daughter image: காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த காலகட்டத்தில் இவருக்கு என ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவானது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மிகப்பிடித்த நடிகராகவும் இவர் திகழ்ந்தார்.

அந்த வகையில் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல்  இவருக்கு சாக்லேட் பாய் என பெயரும் உருவானது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார், அதன்பிறகு மின்னலே, விஐபி போன்ற பல்வேறு திரைப்படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

பொதுவாக ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகர் அப்பாஸ் வில்லனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து அதிலும் வெற்றி கண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார் இவருக்கு அறம் அலி என்ற மனைவி உள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு  ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்துள்ளார்கள்.

abbas daughter-2
abbas daughter-2

தற்போது தலைக்கு உயர்ந்த தன்னுடைய மகளின் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் அப்பாஸ் வெளியிட்டுள்ளார் அப்பாஸின் மகளுக்கு தற்போது 21 வயது நிரம்பி உள்ளது. இன்நிலையில் அவரை பார்க்கும் பொழுது சினிமா நடிகைகள் போல மிகவும் அழகாகவும் கிளாமராகவும் இருப்பதை பார்த்து இவர் விரைவில் சினிமாவில் உதயம் ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

abbas daughter-1