திருமண ஆசைகாட்டி இளம் பெண்ணிடம் 80 லட்சம் ஆட்டையப் போட்டு சாயிஷாவிடம் வசமாக மாட்டிய ஆர்யா!! பரபரப்பு தகவல்

aarya-1
aarya-1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவரை பெரும்பாலும் பலர் ப்ளேபாய் என்று தான் கூறுவார்கள் ஏனென்றால் இவர் பலருடன் காதல் சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆர்யா இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக 80 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற சங்கத்தை சார்ந்தவர்கள் ஆனால் ஆர்யா திடீரென்று கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சாய்ஷாவை காதலித்து அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு வரையிலும் பிளேபாப்பாக சுற்றி வந்த ஆர்யா திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்தார். எனவே இவரின் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருந்தது.

இந்நிலையில் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று புகார் செய்துள்ளாராம்.

அந்தப் பெண் பணம் கொடுத்தற்கான ஆதாரத்தை வைத்துள்ளாராம் மேலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து ஆர்யாவின் தாயாரும் அந்தப் பெண்ணை ஏமாற்றியதாக ஆர்யாவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் பலர் ஆர்யா எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்து விடுவார் என்று கூறி வருகிறார்கள்.