தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக ஆரி என்ன கொடுத்தார்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

aari
aari

aari birthday celebration latest news: விஜய் டிவியின் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது இந்த நான்காவது சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஆரி.

ஆதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் இடையே தன்னுடைய சிறந்த கருத்தைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல் சில பல நல்ல விஷயங்களை அடிக்கடி சமூகத்திற்கு சுட்டிக்காட்டுவார். அதுமட்டுமல்லாமல் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஆரி கொடுத்த அறிவுரையின்படி தற்போது பாலாஜியும் விவசாயம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய மகள் ரியாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மகளுக்கு விதைகளை பரிசாக அளித்துள்ளார் மேலும் அந்த விதைகளை தனது வீட்டின் பால்கனியில் அவற்றை விதைக்கும் படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு தலைப்பாக தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுமட்டுமல்லாமல் இன்று நீ விதைக்கும் விதையானது நாளைய பலரின் உணவாக அமையும் என தன்னுடைய சொந்த உணவுக்கான தேவையை நாமே பூர்த்தி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறு வயதிலேயே தன்னுடைய மகளுக்கு இப்படிப்பட்ட அறிவுரைகளை கூறியதை பார்த்தே பல்வேறு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரை பாராட்டியும் வருகிறார்கள்.