நடிகர் ஆரவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், அதன் பின்பு ஓ காதல் கண்மணி,சைத்தான் ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான உடன் மார்கரெட் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படத்தில் நடித்தார், இதனைத் தொடர்ந்து தற்போது ராஜாபீமாஎன்ற திரைப்படத்தில் ஆரவ் நடித்துவருகிறார், நரேஷ் சம்பத்து இயக்கும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் நாசர் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
இந்த ஊரடங்கு உத்தரவை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ஆரவ் ஆம் தற்பொழுது சிக்ஸ்பேக் வைத்து மாஸ் காட்டியுள்ளார், தற்போது அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ் இதோ அந்த புகைப்படம்.