ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில் அமுல்பேபி போலிருந்த நடிகர் இப்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

பல நடிகர்கள் மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் சினிமாவை விட்டு மொத்தமாகவே வெளியேறி இருப்பார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகர்களை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

இவ்வாறு இந்த நடிகர் நடித்த காலகட்டத்தில் சாக்லேட் பாயாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சித்தார்த் வேணுகோபால். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஜூன் 6 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படமாக அமைந்த நான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இவ்வாறு இவர் சில திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் தற்பொழுது விஜய் ஆண்டனி அளவிற்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவரின் சூழ்நிலை தற்பொழுது சினிமா பக்கமே தலை காட்டாத அளவிற்கு மாறிவிட்டது.

இந்நிலையில் இவர் ஆணவ தாண்டவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இத்திரைப்படத்தை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கபட்டது ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படத்தில் இவர் முற்றிலும் வேறு மாதிரியாக மாறி உள்ளார்.