அந்த படம் வெளிவந்த உங்க வாழ்க்கையே மாத்திடும் சார் விக்ரமை பார்த்து அமீர் சொன்ன வார்த்தை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

vikram-
vikram-

திரையுலகில் வெற்றி கண்ட நடிகர் நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகள் ஈசியாக பட வாய்ப்பு கைப்பற்றுகின்றனர் ஆனால் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வரும் நடிகர்கள் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பெற  படாதபாடுவார்கள் அப்படி அஜித்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் சினிமா உலகில் ஹீரோ இடத்தை பிடிக்க..

பல அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்து இருக்கிறார். குறிப்பாக ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார் மேலும் டாப் ஹீரோக்களுக்கு குரல் கொடுத்தவராகவும் இருந்தார். இப்படி தமிழ் சினிமாவில் ஓடிய இவர் ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தில்  சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இப்படி தென்னிந்திய முழுவதும்  ஓடினாலும் அவருடைய மனதில் இருந்த ஒரே ஒரு விஷயம்  ஹீரோவாக வேண்டும் என்பது தான்.  இதனால் தன் நம்பிக்கை தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த விக்ரமுக்கு இயக்குனர் பாலாவின் “சேது” படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்த முடித்து இருந்தார்.

அந்த சமயத்தில் அமீரும், சசிகுமார் மற்றும் விக்ரம் மூவரும் தனியாக அவ்வபோது ஊர் சுற்றுகிறார்கள். படையப்பா படம் வெளியான சமயம் அமீர், சசிகுமார், விக்ரம், மூவரும் படத்தை பார்க்க சென்னையில் உள்ள உதயம் தியேட்டர்  சென்றுள்ளனர். அப்பொழுது நடிகர்கள் பிரிமியர் காட்சி பார்த்துவிட்டு காரில் ஏறி சென்றனர் இதை ஏக்கமாக விக்ரம் பார்த்து உள்ளார்.

அதை கவனித்த அமீர் கவலைப்படாதீங்க சார் “சேது” படம் வெளியான பின் நீங்களும் இதே போல காரில் வந்து இறங்குவீர்கள் என சொல்லி உள்ளார் அவர் சொன்னது சில நாட்களிலேயே பலித்தது செது படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விக்ரமின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.  அடுத்த படத்திலேயே காரில் வந்து கெத்து காட்டினாராம் விக்ரம்.