துணிவு படத்தில் செம்ம ஸ்மார்ட்டாக நடித்துள்ள அமீர் – புகைப்படத்தை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்..!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருவதால் நாளுக்கு நாள் இவரது மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்கர் ராபரி படமாக அமைந்துள்ளதால்..

துணிவு  படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது மேலும் அஜித் புதிய லுக்கில் செம்ம மாஸாக இருக்கிறார். அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி.. சங்கர், ஜான் கொக்கன், அஜய் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் ஆன அமீர், பாவனி, சிபி போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் டப்பிங் பணிகளை நோக்கி படக்குழு நகர்ந்து இருக்கிறது அண்மையில் கூட டப்பிங் பூஜை போடப்பட்டு புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது துணிவு திரைப்படத்தின் டப்பிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதில் அஜித், மஞ்சு வாரியார் ஆகியவர்களை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலம் அமீர் தற்பொழுது டப்பிங் பேசி வருகிறார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்பொழுது அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி அசத்து வருகின்றனர் மேலும் அஜித்தை பார்த்தீர்களா என கேட்டு  வருகின்றனர் இதோ அமீர் டப்பிங் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்..