தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலருக்கும் ஃபேவரட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம் பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் நடன கலைஞர் அமீர் மற்றும் சீரியல் நடிகை பாவனி.
இவர்களை நாம் பலருக்கும் தெரியும். சீரியல் நடிகை பாவனி ஏற்கனவே திருமணம் ஆகி அவரது கணவர் உயிர் இழந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயணித்தார். அப்போது நடன கலைஞர் அமீர் பாவனியை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்ட பிறகும் பாவனியை காதலிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் பாவனி இதை மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனினும் இருவரும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களுக்கு ஒன்றாக இணைந்து பயணித்து வருகின்றன. அப்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் கூட இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தற்போது பாவனிக்கு சர்ப்ரைஸ் ஆக அவரது அக்கா மற்றும் தங்கை இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் அமீரை பற்றி மிகவும் பெருமையாக பேசி வாட்ச் கூட கிப்டாக அமீருக்கு கொடுத்தனர். இதற்குப் பிரியங்காவும் அமீர் அவரது காதலை இப்படி ஒரு டிவி தொலைக்காட்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதனை பாவனியின் வீட்டார்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் அமீரிடம் நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை உனக்கு கூடிய விரைவில் அமையும் எனவும் பேசியதால் நெட்டிசன்கள் பலரும் பிரியங்காவை நீ நன்றாக வேலை பார்க்கிறாய் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.