Sai Pallavi : சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி இவர் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றார், இவர் பிறந்தது கோயம்புத்தூரில் தான், மருத்துவ படிப்பை படித்துள்ளார் சாய்பல்லவி ஆனால் சினிமாவின் மீது இருந்த ஆசையால் நடிக்க வந்தவர்.
அந்த வகையில் சாய் பல்லவி 2005 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியாகிய கஸ்தூரிமான் என்ற திரைப்படத்திலும், 2008 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிய தாம் தூம் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சராக நடிக்க வைத்தார்.
அதேபோல் தமிழில் கரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், மாரி இரண்டாவது பாகத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மாரி படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தது அது மட்டும் இல்லாமல் அதன் பிறகு சூர்யாவுடன் என் ஜி கே திரைப்படத்திலும் நடித்திருந்தார் இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி தற்பொழுது ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
பாலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வரும் அமீர்கானின் மகன் JUNAID கான் அவர்களுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார், இதற்கு முன்பு Junaid khan யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் தன்னுடைய முதல் திரைப்படத்தினை நடித்து முடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவருக்கும் சாய் பல்லவிக்கும் ஒரு வயது வித்தியாசம் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது சாய்பல்லவிக்கு அவரை விட ஒரு வயது அதிகமாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே ஹிந்தி ரீமேக்கிலும் Junaid khan நடிக்க இருக்கிறாராம் இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் தங்கை குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.