கடந்த பிக் பாஸ் சீசன் 5 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிறைவடைந்தது இந்த சீசனை தொடர்ந்து கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றன இந்த நிலையில் பிக் பாஸ் 5 யில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரையும் நம்மால் மறந்திருக்க முடியாது அந்த அளவிற்கு சீசன் 5 என்டர்டைன்மென்ட் ஆக இருந்தது.
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பிரபல காதல் ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி. அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியிடம் காதலை வெளிப்படுத்தி இருந்தார் தற்போது பேபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டு தனது நடனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கர் ஆக ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனியின் நெருக்கத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் காதலிக்கிறார்களா எனவும் யோசித்து வருகின்றனர் ஆனால் பாவனி இது குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் கொடுக்கவில்லை. இருந்தும் அமீருடன் பாவனி அவ்வப்போது ஊர் சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியின் அக்கா சர்ப்ரைஸ் ஆக இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார். அப்போது அவர் பேசிய போது அமீர் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அமீர் தான் பாவனியின் இந்த மாற்றத்திற்கு காரணம் பாவனியை இந்த நிகழ்ச்சியில் மிகவும் வெளிப்படையாக பேச வைத்து பாவனியின் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார்.
இதனால் அமீர் பாவனியின் உறவு பலமாக உள்ளது. இதற்கு பாவனி அக்கா அமீருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாச்சை பரிசாக கொடுத்துள்ளனர் அதை பார்த்து ஷாக் ஆகி பாவனி அவரே தன் கையால் அமீருக்கு போட்டு விடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி அமீர் மற்றும் பாவனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.