வாய்ப்பளித்தும் மறுத்துள்ள அமீர்.. அமீர் தொடர்பாக முக்கிய பதிவை வெளியிட்ட பாவனி.!

ameer bhavani
ameer bhavani

சமீப காலங்களாக பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது ஏனென்றால் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார் மேலும் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் இவர்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. இதற்கு முன்பே பாவனி சின்னத்திரையில் இரட்டைவால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. இவ்வாறு சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் மேலும் தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ஆம் ஆண்டு பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் பிரதீப் அவர்களுக்கு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மீடியாவில் இருந்து விலகி இருந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.இந்நிகழ்ச்சியில் பாவனியை பிக்பாஸ் நிகழ்ச்சி சக போட்டியாளர்கள் நாமினேட் செய்து வந்தாலும் ரசிகர்களால் அனைத்து முறையும் காப்பாற்றப்பட்டு இந்நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். இந்நிகழ்ச்சியில் 50 நாட்களுக்குப் பிறகு வைல்ட் கார்டு என்ரியாக அமீர் அறிமுகமான நிலையில் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார்.

எனவே இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட இவர் தற்பொழுது பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக நடனமாடி வருகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலிக்க தொடங்கி விட்டார்கள் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும் தற்பொழுது வரையிலும் அமீர் ஒவ்வொரு எபிசோடுகளிலும் பாவாணியை காதலிப்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கூறியுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் இது குறித்து பாவனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலியான போட்டியாளர் உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடன இயக்குனரையும் ஒரு மாஸ்டரையும் பெற்றேன், தனது கனவிலும் கூட நான் நடனம் ஆடுவதை நினைத்தது கூட இல்லை, பயிற்சிக்கு ஒரு நாள் மட்டுமே கிடைத்தாலும் பயமின்றி நடனமாட முடியும், இதைவிட யாரும் சிறப்பாக என்னை உருவாக்க முடியாது.

கடுமையான முழங்காலில் காயம் ஏற்பட்டதால் உங்களுக்கு விடுப்பு எடுக்க வாய்ப்பு கிடைத்தது. நாற்காலியில் அமர்ந்து நடிப்பதற்கு சேனல் உங்களுக்கு வாய்ப்பு அளித்தது ஆனால் நீங்கள் இன்னும் கைவிடவில்லை எப்பொழுதும் போல் உங்களை நம்பியவர்களுக்காக நடனமாட தேர்ந்தெடுத்தீர்கள்.

ameer bhavani 1
ameer bhavani 1

ஒருவேளையான அர்ப்பணிப்பு கொடுக்கப்பட்டவுடன் என்னிடம் சொல்லுங்கள் பின்னால் எதுவும் நடக்கட்டும் அதை ஒருபோதும் நடுவில் விட்டு விடாதீர்கள், உங்கள் பணிக்கான கடின உழைப்பு மற்றும் நற்பணிப்புக்கான உங்கள் மீது மிகுந்த மரியாதை. கடைசியாக உண்மையில் இது உங்களை மகிழ்விப்பவர்களுக்காகவே நாங்கள் நிகழ்த்த நினைத்தோம் இது எங்களின் சிறந்ததாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும் ஆனால் நண்பர்களே இதை மறக்க முடியாத ஒன்றாக மாற்றி உள்ளீர்கள் எங்கள் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி உங்களுக்காக இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என உணர்கிறோம் எனக் கூறியுள்ளார்.