அமீர்-பாவனி திருமண சர்ச்சையால் பிக்பாஸ் ஜோடிகளில் இருந்து விலகலாம்.?

ameer bhavani 2
ameer bhavani 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்டு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வரும் பிரபலங்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குப் பெற்று பிரபலமடைந்த கதால் ஜோடிகள் தான் அமீர்-பாவணி.

இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமானவர் தான் அமீர் அந்த சீசனில் பங்குபெற்று, இந்த சீசனில் பங்குப்பெற்று வந்த சீரியல் நடிகை பாவனி ரெட்டியை காதலித்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி பேசுவது, விளையாடுவது என இதுபோல் போன்றவற்றை செய்து வந்ததால் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக மாறினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பெற்று வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்ந்து அமீர் தனது காதலை பிக்பாஸ் ஜோடிகள் 2 மேடையில் பாவனிடம் தெரிவித்த போதும் அதனை ஏற்பதற்கு தயக்கமாக இருக்கிறது கால அவகாசம் வேண்டும் என அமீரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார் பாவனி.

இப்படிப்பட்ட நிலையில் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது சுற்றில் கல்யாணம் கொண்டாட்ட விழாவில் அமீர் பாவனிக்கு பொட்டு வைத்து தாலி கட்டி திருமணம் நடப்பது போன்ற நடனமாடியிருந்தார்கள். இந்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இவ்வாறு பல மாதங்களாக அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் எப்படியோ அமீரின் ஆசையை விஜய் டிவி நிறைவேற்றி விட்டது.

தற்பொழுது அமீரும் பாவனியும் இந்நிகழ்ச்சியை விட்டு விலக இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது இதற்கு பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அமீர் மாஸ்டர் கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி, மேடையில் பயம் இல்லாமல் நடனம் ஆடுவதற்கு முக்கிய காரணம் அவர் கொடுத்த பயிற்சிதான், அவருக்கு முட்டியில் கடுமையான காயம் ஏற்பட்ட போதும் லீவு எடுக்காமல் ரசிகர்களுக்காக நடனத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டின் காரணமாகவும் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருந்து வர விடக்கூடாது என வலியையும் பொறுத்துக் கொண்டு நடனமாடி இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கூட இந்நிகழ்ச்சியில் இருந்து இருவரும் பின்வாங்காமல் இருந்தோம் ஆகையால் பிக்பாஸ் பிபி நிகழ்ச்சியை விட்டுப் போகும் எண்ணம் இவருக்கும் இல்லை இனி வரும் எபிசோடுகளில் இன்னும் சிறப்பாக நடனமாடி ரசிகர்கள் மகிழ்ச்சி படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.