அமீர் – பாவனி திருமண பண்ணிக்க போறாங்களா.? பிரியங்கா கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜோடி.! ஷாக்கான ரசிகர்கள்.

amir and bhavni
amir and bhavni amir and bhavni

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது மக்கள் மற்றும் சினிமா துறையில் பிரபலமடைந்து காணப்படுகின்றன அந்தவகையில் பிக்பாஸ் முதல் சீசன் முதல் தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இந்த ஐந்து சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசியாக நிறைவுபெற்ற ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவணி. பாவனி சின்னத்திரை நடிகையாவார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர்.

அமீர் நாளைய பிரபுதேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர். பிக் பாஸ் வீட்டில் அமீர் பவானியிடம் காதலை கூறியிருந்தார் ஆனால் பாவணி அமீரின் காதலை மறுத்து நட்பாக உரையாடி வந்தார். இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் அமீர் பவானியிடம் பேசுவதை நிறுத்தவில்லை.

இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகியது அதனை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் அமீர் மற்றும் பவானி இருவரும் ஜோடியாக சேர்ந்து கலந்து கொண்டனர். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் விஜே பிரியங்கா பிபி நடன நிகழ்ச்சி செட்டில் ஒரு வீடியோ ஒன்றை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் அமீர் மற்றும் பாவனியிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரெண்டு பேருக்கும் கல்யாணமா என கேட்டுள்ளார் அதற்கு எனக்கு ஓகே தான் எனக் அமீர் கூறினார் அதைத் தொடர்ந்து பவானி நான் ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டப் போகிறேன் என சிரித்தபடியே கூறினார். இருந்தாலும் ரசிகர்கள் பலரும் அமீர் மற்றும் பாவணி இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.