விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளாகும். அப்படி அதிக பொருட்செலவில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக முகம் தெரியாத பல பிரபலங்கள் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல ரீச் அடைந்து பின் சினிமாவிலும் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர், நடிகை, நடனக்கலைஞர், நாடகக் கலைஞர், பாடகர், செய்தி வாசிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். தற்போது வரை தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் வரை நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றன.
அதில் பிபி ஜோடிகள் சீசன் 1 சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது இதில் பிக் பாஸ் சீசன் போட்டியாளர்கள் பலரும் ஜோடிகளாக கலந்துகொண்டனர் ஜட்ஜாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் கலந்து கொண்டனர். முதல் சீசனில் வெற்றியாளராக அனிதா மற்றும் ஷாரிக் முதல் இடத்தைப் பெற்றனர் இந்த நிலையில் தற்போது பிபி ஜோடிகள் சீசன்2 நடைபெற உள்ளது.
அதில் ஜோடிகளாக பிரியங்கா மற்றும் ராஜு, அபிஷேக் மற்றும் மதுமிதா போன்ற பல ஜோடிகளும் கலந்து கொள்ள உள்ளனர் இதில் மக்கள் பலருக்கும் பிடித்த அமீர் மற்றும் பாவணி இருவரும் ஜோடியாக நடனமாட உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 இல் அமீர் பாவணி இடம் காதலை கூறியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகும் அமீர் பல நிகழ்ச்சிகளிலும் அவர் காதலை மாற்றிக் கொள்ளாமல் பாவணியை காதலிப்பதாக தான் கூறி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவதன் மூலம் அமீரின் காதல் வெற்றிபெறும் எனவும் மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ.