அமீர் -பாவனி சேர்ந்து வாங்கிய பிரமாண்ட சொகுசு கார்.? குவியும் வாழ்த்துக்கள்.

amir-
amir-

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சி ஆகும். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆக இருந்து வருகின்றன. அந்த வகையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 யில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவணி ரெட்டி இவர் சின்னத்திரை சீரியல் நடிகை அதிலும் குறிப்பாக சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

பின்பு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பிக் பாஸ் 5 யில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பரிட்சயமானார். இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த நடன கலைஞர் அமீர் பிக் பாஸ் வீட்டில் பாவணியிடம் காதலை தெரிவித்து இருந்தார். பாவணி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் அமீருடன் சகஜமாக பேசி வந்தார்.

பின்பு பிக் பாஸ் 5 நிறைவடைந்த பிறகும் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். அதன்படி பிபி ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியிலும் அமீர் மற்றும் பாவணி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் இவர்களது நடனம் மக்கள் பலரும் பாராட்டும்படி அவ்வளவு அருமையாக இருந்தது.

அதன் அடிப்படையில் பிபி ஜோடிகள் சீசன் 2 இறுதியில் பாவனி மற்றும் அமீர் ஜோடி டைட்டிலை வின் செய்தனர். இதனைத் தொடர்ந்து அமீர் மற்றும் பாவணி இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

அந்த கார் உடன் நின்று அமீர் மற்றும் பாவணி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது  ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து அமீர் மற்றும் பாவணி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

amir and bhavani
amir and bhavani