Aaha Kalyanam september 12 : இன்றைய எபிசோடில் சூர்யா கௌதமை பார்த்த ரிங் குடுத்தா ஒர்க் அவுட் ஆகாது என என்கிட்ட சொல்லிட்டு காபி ஷாப்ல போய் நீ ஐஸ்வர்யாவை பார்த்து ரிங் கொடுத்து இருக்க.. இது உனக்கு கேவலமா இல்லை என்று திட்டுகிறார்.. அடுத்து ராஜலட்சுமியும் சித்ராவிடம் கல்யாண பொண்ண தூக்கிட்டு போய் கௌதம் சூர்யாவுக்கு பெரிய துரோகம் பண்ணி இருக்கான்..
தம்பி தம்பி என்று கௌதம் மேல சூர்யா எவ்வளவு உயிரா இருந்தான் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.. பிறகு வெங்கடாசலம் தாத்தா, பாட்டி போன்ற எல்லோருமே கௌதமை ஒரு பெண்ணை ஏமாத்தி கர்ப்பமாகிட்டு இப்ப இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ண வந்திருக்கியே என்று திட்டுகின்றனர்..
அடுத்து சூர்யா கௌதம் சட்டையை பிடித்ததும் அண்ணா நான் நடந்த உண்மை எல்லாம் சொல்றேன் ஐஸ்வர்யா உங்க அண்ணனை எனக்கு பிடிக்கல, உன்ன தான் புடிச்சிருக்கு, நீ தான் அழகா இருக்க நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று என்னென்னவோ பேசி என்னை மயக்கிட்டா என்று சொல்ல திரும்பவும் பொய் சொல்றியா என கௌதமை அடிக்கிறார்.
அடுத்து அருந்ததி இந்த குடும்பத்தில் போய் சம்மந்தம் பண்ண நினைச்சமே நல்லவேளை கடவுள் புண்ணியத்துல எங்களை காப்பாத்திட்ட என்று மகாவுக்கு நன்றி சொல்கின்றனர். பிறகு வெண்ணிலாவும் கௌதம் மேல் மாலையை தூக்கி எறிந்து விட்டு கொன்னுடுவேன் என மிரட்டி விட்டு போகிறார்..
அடுத்து கோடீஸ்வரி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து வீட்டில் அழுது கொண்டிருக்கிறார் அப்போது அவரது கணவனை பார்த்து என் மேல தான் தப்புங்க நான் தான் புள்ளையை ஒழுங்கா வளர்க்கவில்லை என்றும் கண்ணீர் விடுகிறார்.. அப்போது மகா, பிரபா, ஐஸ்வர்யா மூன்று பேரும் வீட்டிற்கு வருகின்றனர்.
கோடீஸ்வரி மகாவை பார்த்து நீ என்ன இவங்க கூட வர உங்க வீட்ல தான் இன்னைக்கு பங்க்ஷன் ஆச்சே என்று கேட்க அந்த பங்க்ஷனுக்கு தான் அக்காவ கூட்டிட்டு போனோம், ஐஸ்வர்யாவை கர்ப்பம் ஆக்கி ஏமாத்துணவ எங்க வீட்டுல தான் இருக்கான், அந்த சித்ராதேவி ஓட பையன் கௌதம் தான் அக்காவை ஏமாத்துனது என்று சொல்ல இப்பதான் உன் பிரச்சனை முடிந்து.
கொஞ்சம் நல்லா இருக்குன்னு நினைச்சேன் அதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வந்துச்சு உனக்கு என்று மகாவிடம் கோடீஸ்வரி சொல்கிறார்.. அடுத்து சித்ரா கௌதமை பார்த்து என்னை இப்படி அசிங்கப்படுத்திவிட்டேயடா அந்த அருந்ததி குடும்பத்தில் சம்பந்தம் வச்சிருந்தா நம்ம எங்கேயோ போய் இருக்கலாம்..
இப்படி பண்ணிட்டியே டா என்று கேட்க நீதாமா சின்ன வயசுல இருந்து சூர்யாவிட பெருசா வரணும் என்று சொல்லி சொல்லி தான் சூர்யா கட்டிக்க இருந்த பொண்ணையும் நான் அடைய நினைச்சேன், ஆனா அந்த ஐஸ்வர்யா பணக்காரின்னு நினைச்சு ஏமாந்துட்டேன் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது