Aaha kalyanam today episode October 9 : இன்றைய எபிசோடில் கௌதம் ஆபீஸ் பணத்தை திருடின விஷயம் வீட்டிற்கு தெரிய வர வேதாச்சலம் இனி ஆபீஸ்ல நீ ஒரு ஒர்க்கரா தான் வேலை செய்யணும் உனக்கு மாசம் சம்பளம் 50,000 மட்டும் தான், மத்தபடி கம்பெனி ஷேர் ப்ரோபிட் போன்றவையிலிருந்து உனக்கு பணம் வராது என்று அதிரடியாக சொல்லிவிட்டார்.
இதைக் கேட்டு கௌதம் எனக்கு 50,000 போதும் நான் இந்த ஆபீஸ்ல வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்.. பிறகு மகா சூர்யாவிடம் உங்க தம்பி பண்ற தப்புக்கெல்லாம் எத்தனை தடவை நீங்க துணை போவீங்க, நீங்க இப்படி பண்றதால அவரு திரும்பத் திரும்ப தப்பு செஞ்சிட்டு தான் இருப்பார் என்று சொல்ல சூர்யா போதும் நிறுத்து எனக்கு தெரியும் இந்த விஷயத்துல நீ தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
லியோ டிக்கெட் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர் வெளியிட்ட ஆடியோ..
அடுத்து மகா ஐஸ்வர்யாவிடம் சென்று தாத்தா என் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்? நீ கர்ப்பமா இல்லங்குற விஷயத்தை அவர் கிட்ட சொல்லிடலாம் என்னைக்காவது ஒரு நாள் தெரிய வரும் போது நம்ம ரெண்டு பேருமே கஷ்டப்படுவோம் என்று சொல்ல ஐஸ்வர்யா அந்த பொய்யை எப்படி உண்மையாக்குவது என்று எனக்கு தெரியும் அதுக்கு தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன் என சொல்லிவிட்டார்.
பிறகு கோடீஸ்வரி சேட்டுவை அடைந்து வைத்த ரூமில் போய் அவரது வாய்க்கட்டை திறந்து இந்த வீட்டை எங்கிட்டயே கொடுத்துடுறேன்னு சொல்லு இப்ப வட்டி மட்டும் வாங்கிக்கோ ரெண்டு வருஷம் கழிச்சு அசல் வாங்கிக்கிறேன் சொல்லு உன்னை விட்டுடுறேன் என கோடீஸ்வரி சொல்கிறார்.. ஆனால் சேட்டு என்னை அடித்து வைத்து கொடும படுத்துற இல்ல இந்த வீட்டை நான் தான் வாங்குவேன் என சொல்வதால் மீண்டும் சேட்டை அடித்து கட்டி போடுகிறார்.
பிறகு தசாதரன் ஐஸ்வர்யாவிற்காக மாங்கா ஊறுகாய் வாங்கிட்டு வந்திருக்கேன் என்று சொல்லக் கோடீஸ்வரி நானும் ஐஸ்வர்யாவிற்காக மாங்கா வாங்கி வச்சிருக்கேன் என இதை இரண்டையும் பிரபா கையில் கொடுத்து போய் ஐஸ்வர்யாவிடம் கொடுத்துட்டு வர சொல்கின்றனர்.. பிரபா மகா வீட்டிற்கு வருவதும் காயத்ரி பிரபாவை உள்ள கூப்பிட்டு ஷோபாவில் உட்கார வைக்கிறார்.
இதைப் பார்த்துச் சித்ரா தேவி எழுந்திரி உன்னை யாரு இங்க உட்கார சொன்னா, முதல்ல உன்னை யாரு வீட்ல விட்டது, என்ன உங்க வீட்ல அக்கா கிட்ட காசு வாங்கிட்டு வர சொன்னாங்களா இல்ல ஏதாவது புதுசா சமச்சி இருந்தா எடுத்துட்டு வர சொன்னாங்களா என பிரபாவை அசிங்கப்படுத்துகிறார்.. இதைக் கேட்ட மகா என் தங்கச்சிய என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார்.
பிறகு பாட்டியும் இது என் வீடு வீட்டுக்கு வந்தவங்கள இப்படி மரியாதை இல்லாம பேச உனக்கு எந்த ரைட்சும் இல்லை என்று சொல்கிறார் ஆனால் ஐஸ்வர்யா மட்டும் பிரபாவை பார்த்து உன் ரவுடித்தனத்தை இங்கேயும் காமிச்சிருப்ப அதனாலதான் அத்தை உன்னை திட்டி இருப்பாங்க, என் அத்தை கிட்ட மரியாதையா மன்னிப்பு கேளு என்று சொல்கிறார்.
மேலும் மகாவையும் ஐஸ்வர்யா என் அத்தை கிட்ட மரியாதையா பேசு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மகா ஐஸ்வர்யாவை பார்த்து அவங்க நம்ம குடும்பத்தை அசிங்கமா பேசுறாங்க அது உனக்கு தப்பா தெரியலையா என்று கேட்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது…