Aaha Kalyanam today episode october 27 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்டில் மகா சூர்யாவை அழுது கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் அங்கு டாக்டர் ட்ரீட்மென்ட் செய்ய சொல்கிறார் ஆனால் அவரோ நீங்கள் 20,000 பணம் கட்டினால் தான் டிரீட்மென்ட் செய்வேன் எனக் கூற கையில் காசு இல்லை தாலியை வேணா கழட்டி தரேன் ட்ரீட்மென்ட் பண்ணுங்க என சொல்லுகிறார்.
அதற்கு டாக்டர் நாங்க என்ன அடகு கடையா வைத்திருக்கிறோம் என கூறி விடுகிறார். என் புருஷன் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது பெரிய நகை கடைக்கு ஓனர் பெரிய ஆள் என கூறுகிறார். ஆனால் டாக்டர் நீங்கள் எவ்வளவு ஆளாக இருந்தாலும் பணம் கட்டினால் தான் டிரீட்மென்ட் என கூறுகிறார்.
உடனே மகா தன்னுடைய நண்பருக்கு போன் செய்து செய்தி மற்றும் பத்திரிகை சேனல்களின் நம்பர்களை வாங்கி நீங்கள் டிரீட்மென்ட் செய்யவில்லை என்றால் நான் பத்திரிகையாளர்களை இங்கு வரவைத்து விடுவேன் என கூற டாக்டர் பயந்து போய் ஓனருக்கு போன் செய்து இங்கு ஒரு எமர்ஜென்சி ஒருவருக்கு டிரீட்மென்ட் செய்யணும் என கூற ஓகே சொல்கிறார்.
உடனே டாக்டர் மகா கிட்ட நீங்க காசு கொடுக்க வேண்டாம் ட்ரீட்மென்ட் பண்ணுகிறார். மறுபக்கம் தசரதனும், கோடீஸ்வரையும் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறனர் அப்பொழுது கோடீஸ்வரி சூர்யா மற்றும் அவங்க தாத்தா கிட்ட சொன்னா நம்ப பொண்ண விட்டுடுவாங்க வாங்க போய் பாத்துட்டு வரலாம் என தசரதனை கூப்பிடுகிறார்.
புடவையுடன் நனைந்த மாளவிகா மோகனன்.! நீங்க நனைந்தா எங்களுக்கு சளி பிடிக்குது எனக்கூறிய ரசிகர்கள்..
ஆனால் தசரதன் கொஞ்சமாவது மகா வாழ்க்கையை யோசிச்சு பாத்தியா இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவ பிரச்சனையிலிருந்து மீண்டு வர இந்த நேரத்துல இந்த விஷயம் தெரிஞ்சா மகாவை இன்னும் அசிங்கப்படுத்துவாங்க என கூறுகிறார். அடுத்து ஹாஸ்பிடலில் சூர்யாவுக்கு ட்ரீட்மென்ட் முடிந்து அவர் குணமாகியதால் மகா செம சந்தோஷத்தில் இருக்கிறார் பிறகு இருவரும் காரில் ஏறி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.