Aaha kalyanam today episode October 26 : இன்றைய எபிசோடில் சூர்யா எனக்கு நானே சமைச்சுக்கிறேன் என்று பிரட் ஆம்லெட் செய்தார் ஆனால் அது கருகிவிட்டது.. பிறகு மகா நான் சமைத்ததை சாப்பிடுங்க என்று கொடுக்க சூர்யா வீம்பாக எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பிடாமல் இருக்கிறார்.
நேரம் ஆக ஆக சூர்யாவிற்கு பசிப்பதால் ஃப்ரிட்ஜில் ஏதாவது இருக்கா என்று பார்க்க அதில் ஐஸ் கிரீம் இருப்பதை பார்த்து சூர்யா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மகா வந்ததும் இது ஒன்னே ஒன்னு மட்டும் சாப்பிட்டு வரேன் என்று சொல்கிறார் மகாவுக்கு சூர்யா ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வீசிங் வரும் என்பது தெரியாததால் சாப்பிட்டு வாங்கள் என்று சொல்லிவிட்டு போகிறார்.
எவ்வளவு அடி விழுந்தாலும் நான் எழுவேன்.. நீ மேல வர பாரு – நடிகர் கோபாலுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்
அடுத்து பிரபா போலீஸ் ஸ்டேஷனில் லாக்கப்பில் இருக்கிறார்.. அப்பொழுது கான்ஸ்டபில் இடம் எங்க அப்பா அம்மா வெளியே இருக்காங்க அவங்கள உள்ள விடுறீங்களா நான் அவங்ககிட்ட பேசணும் என்று சொல்ல பிறகு தசாதரன் உள்ளே வருகிறார் தன் அப்பாவிடம் பிரபா என்ன மன்னிச்சிடுங்க அப்பா என்னால தான் உங்களுக்கு கஷ்டம் என்று சொல்ல..
தசாதரன் நீ என்னம்மா தப்பு பண்ணின நம்ம குடும்பத்தை பற்றியும் உன் அக்காவ பத்தியும் தப்பா பேசினதால தான அடிச்ச உன்மேல எந்த தப்பும் இல்லை உன்ன நெனச்சி பெருமை தான் படுறேன் என்று சொல்கிறார்.. அடுத்து நடு ராத்திரியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது சூர்யாவிற்கு வீசிங் வருகிறது.
உடனே தலகாணியை தள்ளிவிட்டு கீழே படுத்திருக்கும் மகாவை சூர்யா எழுப்ப மகா பதறிப் போய் வீசிங் ட்ராப்ஸ் எடுத்து சூர்யாவிற்கு கொடுக்கிறார் ஆனால் அது காலியாக இருக்கிறது.. பிறகு ஹாஸ்பிடல் போகலாம் என்று சூர்யாவை அழைத்துக் கொண்டு செக்யூரிட்டியை கூப்பிடுகிறார்.
செக்யூரிட்டி என்னோட டூவீலர் இருக்கு அதுல வேணும்னா நான் அழைச்சிட்டு போறேன் என்று கேட்க மகா நானே அழச்சிட்டு போறேன் என்று ஸ்கூட்டியில் சூர்யாவை உட்கார வைத்து துண்டால் கட்டிக்கொண்டு போகிறார் போகிற வழியில் பயப்படாதீங்க நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லை உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கையுடன் மகா சூர்யாவுக்கு சொல்லிக் கொண்டே போகிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.