Aaha Kalyanam Today Episode October 25 : இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யாவை பற்றி தப்பாக பேசியதால் கோபப்பட்ட பிரபா ஒரு பையனை ஸ்ட்ரிக்கால் அடிக்க அந்த பையனுடைய அப்பா அம்மா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டனர் அதனால் போலீஸ் கோடீஸ்வரி வீடு தேடி வந்து பிரபாவை அரெஸ்ட் பண்ணி விட்டனர்.
இது தெரிந்த பிரபா உடைய பெரியம்மா பாக்கியா ஸ்டேஷனுக்கு வந்து நான் கமிஷனர் கிட்ட பேசுறேன்னு சொல்லி எங்க ஏரியால இருக்கிற சால்ட் சந்தானத்தை உங்களுக்கு தெரியுமா சார் அவர் எனக்கு ரொம்ப பழக்கம்.. அவருக்கு போன் பண்ணி தரேன், அவர் பேசினா பிரபாவ விட்டுருவீங்களா என்று கேட்க போலீஸ் சால்ட் சந்தானத்தை நேற்று தான்..
விஜய் தூக்கி எறிந்த கதையில் போட்டி போட்டு நடித்த சூர்யா.! கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம்
அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சிருக்கேன் என்று சொல்ல பாக்யா ஷாக் ஆகிறார்.. அடுத்து சூர்யா மகாவிடம் நேத்து நைட்டு என்ன நடந்ததுன்னு சொல்றேன்னு தானே ஆபீஸ்க்கு வந்த சொல்லவே மாட்டேங்குற என்னதான் நடந்தது சொல்லு என்று கேட்க மகா என்னென்னமோ நடந்தது அதை நான் மறந்துட்டேன் என்று சொல்கிறார்.
அதனால் கோபப்பட்ட சூர்யா என்ன நடந்தது என்கிற உண்மையை நீ சொல்ல மாட்டியா அப்பனா நடந்தே வீடு வந்து சேரு என்று சொல்ல மகா நீங்க இல்லனா என்னால வீட்டுக்கு வந்து சேர முடியாதா என்று ஒரு ஆட்டோவை நிப்பாட்டுகிறார்.. அந்த ஆட்டோக்காரரிடம் சூர்யா நீ இவங்களை அழைச்சிட்டு போக கூடாது என்று கேட்க..
அத சொல்ல நீங்க யாரு? நான் அழைச்சிட்டு போவேன் என்று ஆட்டோ டிரைவர் மகாவை அழைத்துக் கொண்டு போகிறார்.. வீட்டிற்கு வந்ததும் மகா கிச்சனில் சூர்யாவிற்காக சமைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யாவும் அங்கு வந்து எனக்கு நானே சமைத்து சாப்பிட போறேன் என்று சொல்லிவிட்டு பிரட் ஆம்லெட் செய்கிறார்.. தோசை கல்லில் பிரட் ஆம்லெட்டை போட்டுவிட்டு கேஸ்சை ஹை ஃப்ளேமில் வைத்து விட்டார் அதனால் ஆம்பிளேட் கருகிவிட்டது..
அதைப் பார்த்து மகா யாரோ தானா வந்து சமைச்சு சாப்பிடுறேன்னு சொன்னாங்க இப்ப ஆம்லெட் இப்படி கரிகிடுச்சே என்று நக்கலாக சிரிக்கிறார்.. அடுத்து கோடீஸ்வரி தசதரனிற்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட சொல்கிறார் ஆனால் தசாதரன் பிரபா சாப்பிடாம உள்ள இருக்கா என்னால எப்படி சாப்பிட முடியும் என்று வருத்தப்படுகிறார்.. இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது