Aaha kalyanam today episode October 24 : இன்றைய எபிசோடில் பிரபாவை தேடி கோடீஸ்வரி வீட்டிற்கு போலீஸ் வருகிறது.. போலீசை பார்த்து கோடீஸ்வரியும், தசாதரணும் பதறிப் போய் என்னவென்று கேட்க உங்க சின்ன பொண்ணு பிரபா ஒரு பையனை ஸ்டிக்கால அடிச்சிருக்காங்க அதனால கேஸ் கொடுத்து இருக்காங்க என்று சொல்லி பிரபாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போகின்றனர்.
பின்னாடியே அவங்க அப்பா, அம்மாவும் சொல்கின்றனர்.. அடுத்து ஆபீஸில் சூர்யா பவித்ராவிடம் டிசைன் எடுத்துட்டு உள்ள வாங்க என்று கூப்பிட பவித்ரா காண்பித்த டிசைனை பார்த்துவிட்டு சூர்யா இது எதுவுமே சரியில்லை ஆன்டிக் கலெக்ஷன் வேண்டும் வேற போய் கொண்டு வாங்க என்று சொல்ல..
பவித்ரா அப்செட் ஆகி மகாவிடம் சார் எந்த டிசைன் காமிச்சாலும் புடிக்கலைன்னு சொல்றாரு என்னதான் மேடம் பண்றது என்று கேட்க பிறகு மகா சில டிசைன்ஸ் ரெடி பண்ணி பவித்ராவிடம் கொடுத்து சூர்யா கிட்ட போய் காமிக்க சொல்கிறார்.. அதற்கு பவித்ரா நீங்களே போய் காண்பிங்க என்று சொல்வதும் மகா நான் கொஞ்சம் டிசைன் காமிச்சிருக்கேன் பாருங்க என்று சொல்ல வீட்ல சமைச்சமோ..
கோலம் போட்டமா.. அதோட இரு இதெல்லாம் உனக்கு தேவையில்லாதது என்று சொல்லி அனுப்பி விட்டார் பிறகு பவித்ரா அவர் செஞ்சதாக அந்த டிசைன் எல்லாம் எடுத்துட்டு போய் சூர்யா கிட்ட காண்பிக்க இது ஓகே என சொல்லிவிட்டார்.. பிறகு மீட்டிங் நடக்கிறது.
அப்பொழுது அந்த கலெக்ஷன் கேட்டிருந்தவர்கள் பவித்ராவை பார்த்து இந்த டிசைன் எல்லாம் நீங்க தான் பண்ணிங்களா நல்லா இருக்கு என பாராட்டுகின்றனர்.. அடுத்து பிரபாவை ஸ்டேஷனில் வைத்திருப்பதால் கோடீஸ்வரி யோட அக்கா பாக்கியா அங்கு வந்து நான் கமிஷனர் கிட்ட பேசுறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..