Aaha kalyanam today episode October 20 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கௌதம்காக வசிய மருந்து கலந்து வைத்த பாலை சூர்யா குடித்துவிட்டு மகாவிடம் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டு மடியில் படுத்து தூங்கி விட்டார் அடுத்த நாள் காலையில் கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் நல்லபடியாக முடிந்ததால் எல்லோரும் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அப்பொழுது சித்ரா தேவி கௌதமிடம் நம்ம எல்லோரும் கோவிலுக்கு போற நேரத்துல சூர்யா மட்டும் வீட்ல இருக்கான். அதனால நான் ஒரு பிளான் போட்டு இருக்கேன் என்ன சூர்யாவோட வீசிங் ட்ராப்ஸ் சித்ராதேவி எடுத்து மறைத்து வைத்து விட்டார்.. மேலும் சூர்யாவோட வீக்னஸ் ஐஸ்கிரீம் தான், நான் ஃப்ரிட்ஜில் ஐஸ்கிரீம் வாங்கி வச்சிருக்கேன்..
யாரும் இல்லாத நேரத்துல சூர்யா அத பாத்து சாப்பிடுவான் வீசிங் வரும் மகா வீசிங் ட்ராப்ஸ் இல்லாம என்ன பண்றதுன்னு தெரியாம தவிப்பா.. என்று சொல்ல கௌதம் சூர்யாவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நம்ம மேல பழி வந்துவிடுமே அம்மா என கேட்கிறார் அதற்கு சித்ராதேவி நம்ம மேல பழி வராது அப்படியே சூர்யாவுக்கு ஏதாவது ஆனாலும் உனக்கு தான் அடுத்த எம்டி பதவி நமக்கு சந்தோஷம் தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்து வேதாஜலம் சூர்யா கிட்ட ஒரு வார்த்தை நம்ம சொல்லிட்டு கோவிலுக்கு போகலாம் என காயத்ரியிடம் சொல்லி சூர்யாவை அழைத்து வர சொல்கின்றனர்.. சூர்யா அப்பொழுது தான் தூங்கி எழுந்திருச்சு மகாவிடம் நீ எப்படி பெட்டுக்கு வந்த என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மகா நீங்க தான் என்னை இழுத்து பெட்ல போட்டு ஏதேதோ பண்ணுங்க என சொல்கிறார்.. அப்பொழுது காயத்ரி சூர்யா ரூமுக்கு வந்து நாங்க எல்லாம் கோவிலுக்கு போறோம் வந்து ஒரு பாய் காமிக்கலாமே என்று சொல்ல மகாவும், சூர்யாவும் வருகின்றனர்.
வேதாச்சலம் தாத்தா சூர்யாவிடம் நீ கோவிலுக்கு வரலையா என்று கேட்க ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு என சொல்கிறார் உடனே மகாவும், நானும் கோவிலுக்கு வரவில்லை என்று சொல்கிறார்.. மற்ற எல்லோரும் சந்தோஷமாக கோவிலுக்கு செல்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது