Aaha kalyanam today episode October 16 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரி அவங்க அக்கா ரெண்டு பேரும் ஸ்டோர் ரூமில் கட்டி போட்டு வைத்திருக்கும் சேட்டு கட்டை அவிழ்த்து இந்த வீட்டை கேட்க மாட்டேன்னு சொல்லு உன்ன விட்டுடுறோம் என்று சொல்ல சேட்டு அதெல்லாம் முடியாது நான் வெளியே போனதும் உங்க ரெண்டு பேரு மேலயும் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன் என்று சொல்கிறார்.
பிறகு பிரபாவும் சேட்டை காணும் என்று அவங்க வீட்ல கூட்டமாக இருக்கு கேஸ் போடுறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுவதும் பிரபா உடைய பெரியம்மா பயந்து போய் சேட்டை விட்டுடலாம் என்று கட்டை அவுக்குகின்றனர் உடனே கோடீஸ்வரி அவுக்காத அக்கா என்று சொல்லியும் கேட்காமல் கட்டை அவுப்பதால் சேட்டு ரூமை விட்டு வெளியே ஓடி வருகிறார்.
படம் சூப்பர் ஹிட்.. லிஸ்ட் போட்டு பணத்தை கொட்டி கொடுத்த ரஜினி.. நெகிழ்ந்து போன படக்குழுவினர்
அப்போது தசாதரனும் வீட்டிற்கு வருவதும் சேட்டை பார்த்து விட்டார்.. பிறகு பிரபாவம் அங்கு வந்துள்ளார்.. அவர்களிடம் சேட்டு என அடிச்சு வச்சு இவங்க சித்திரவதை பண்ணுனாங்க இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சுட்டாங்க, இந்த வீடு எனக்கு தான் வீட்டை காலி பண்ணுங்க என்று கேட்க பிரபா எங்க அம்மாவை ஏமாத்தி கையெழுத்து வாங்குன என்று உன் மேல நாங்க கேஸ் போடுவோம் என சொல்கிறார்.
பிறகு தசாதரணும் கோடீஸ்வரி வாங்குன பணத்தை எப்படியாவது ஒரு மாசத்துல திரும்பி கொடுத்து விடுகிறோம் வீட்டு பாத்திரத்தை எங்களுக்கே கொடுங்க என்று கேட்கிறார்.. அடுத்து ஐஸ்வர்யாவிற்கு பதில் கௌதம் கோவிலில் பூஜை பண்ணுகிறார்.
அப்பொழுது பக்கத்தில் பூஜை பண்ணும் ஒரு பெண்ணுக்கு சாமி வந்தது போல் நடித்து பொண்டாட்டிக்காக ஒரு புருஷன் பூஜை பண்றதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அவனுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு எனக்கு தோணுது என கௌதம் வாயில் அலகு குத்திவிட்டார்.. இதைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப சந்தோஷப்படுகிறார் ஏனென்றால் அந்தப் பெண்ணை சாமி வந்தது போல் நடித்து அப்படி செய்ய சொல்லியதே ஐஸ்வர்யா தான்.
ஆனால் கௌதம் இப்படி ஆயிடுச்சு என்று வருத்தத்தில் வீட்டிற்கு செல்கிறார். வீட்டிற்கு போனதும் சித்ராதேவி கௌதமை பார்த்து பூஜை பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு குத்து வாங்கிட்டு வந்திருக்கியாடா என மகனைப் பார்த்து பீல் பண்ணுகிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது…