Aaha kalyanam today episode October 12 : இன்றைய எபிசோடில் கௌதம் ஐஸ்வர்யாவிடம் உனக்காக ஃப்ரூட்ஸ் நட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல ஐஸ்வர்யா என்ன புதுசா இருக்கு இவ்வளவு நாள் என்கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தீங்களே என்று சொல்ல..
உன்கிட்ட திடீர்னு பாசமா இருந்தா அம்மா தப்பா நினைச்சுப்பாங்க.. அவங்களையும் சமாளிக்கணும் அதனால தான் உன் கிட்ட கோபத்தை காமிக்கிற மாதிரி நடிச்சேன் என்று சொல்லி பப்பாளி பழத்தை ஐஸ்வர்யாவிற்கு கட் பண்ணி கொடுக்கிறார் ஐஸ்வர்யாவும் அதை சாப்பிடுகிறார்..
பப்பாளி பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஐஸ்வர்யா ஹாலுக்கு வந்து உட்கார எல்லாரும் என்ன மாசமாய் இருக்கிற பொண்ணு.. பப்பாளி பழம் சாப்பிடுது என ஷாக் ஆகி ஐஸ்வர்யாவை திட்டி அந்த பழத்தை சாப்பிடாதே என்று சொல்கின்றனர் பிறகு பாட்டி டாக்டர் வர வச்சி ஐஸ்வர்யாவை செக் பண்ணி பார்த்துடலாம் என்று சொல்கின்றனர்.
இதை கேட்டு ஐஸ்வர்யாவும், மகாவும் பயப்படுகின்றனர் பிறகு மகா அக்காவை ரூமுக்கு கூட்டிட்டு போய் டாக்டர் வந்து உன்ன செக் பண்ணா இந்த விஷயம் தெரிஞ்சு எல்லாரும் நம்மள அசிங்கமா நினைப்பாங்க பேசாம நம்மளே உண்மையை சொல்லிடலாம் என்று சொல்ல..
ஐஸ்வர்யா அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார். பிறகு டாக்டரும் வருகிறார் ஐஸ்வர்யாவை செக் பண்ண ரூமுக்கு கூட்டிட்டு போகிறார் ஐஸ்வர்யா பதறிப் போய் நிற்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.