இது எல்லாம் நடிப்பா சூர்யா.. தாத்தா கேட்ட கேள்வி.? கையும் களவுமா ஒரு நாள் மாட்டுவ… மகாவை பார்த்து கடுப்பாகும் ராஜலட்சுமி..!

aaha kalyanam today episode
aaha kalyanam today episode

aaha kalyanam : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ஆபீஸ்க்கு சூர்யாவுக்கு டிபன் வருகிறது. அவர் டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவர் ஆபிஸில் வேலை செய்யும் ஒரு பெண்ணை கூப்பிடுகிறார். அவளோ எங்க டிசைன் சரியில்லை என திட்ட போகிறாரா என்று பயத்துடன் வருகிறாள்.

ஆனா சூர்யா அவளை  சாப்பிட சொல்கிறார். அவ்ளோ சாப்பிட்டு முடித்துவிட்டு திட்டுவாரோ என பயத்துடன் கடகடவென அனைத்து சாப்பாட்டையும் சாப்பிட்டு விடுகிறார். ஆனால் சூர்யா எங்கு மகா தாத்தாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாளோ என பயந்து இந்த சாப்பாட்டை அந்த பெண் சாப்பிட்டு விட்டால் நான் போய் தாத்தாவிடம் பாருங்கள் அவ கொடுத்த சாப்பாடு எல்லாத்தையும் சாப்பிட்டுட்டேன் எனக் கூறி தப்பித்து விடலாம் என்ற பிளானில் அந்த பொண்ணை சாப்பிட சொல்கிறார்.

காய் நறுக்குகிறேன் என கையை நறுக்கி கொண்ட சுருதி.! முத்துவுடன் சேர்ந்து கொண்டு விஜயாவுக்கு கட்டம் கட்டும் பாட்டி.! எஜமானியாக மாறிய மீனா..

பின்னர் சூர்யா வீட்டிற்கு செல்கிறார் அங்கு தாத்தா இரும்பி கொண்டிருக்கிறார் அதை பார்த்துவிட்டு சூர்யா தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறார். சூர்யா தாத்தாவிடம் ட்ரீட்மென்ட்காக வெளிநாட்டிற்கு செல்லலாம் என கூறுகிறார்.

அதற்கு தாத்தா அதெல்லாம் வேண்டாம் எனக்கு வயசாயிடுச்சு. மண்ணிலிருந்து வந்த உயிர் மண்ணுக்கே போகட்டும் என கூறுகிறார். தாத்தா சூரியாவிடம் எனக்கு உன் குழந்தைகளை பாக்கணும்னு ஆசையா இருக்கு எனக் கூறுகிறார்.

மேலும் நீ மகாவிடம் உண்மையா பழகுறியா இல்ல எனக்காக நடிக்கிறியா எனக் கேட்கிறார் அதற்கு சூர்யா இல்லை நான்  கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கேன் எனக் கூறுகிறார்.

18 வயது வேலைக்கார பெண் போர்வையை போத்திக்கொண்டு ராதிகா வீட்டில் செய்ததை பார்த்தீர்களா.! அப்போ வீட்டை விட்டு வெளியே அனுப்பியதற்கு காரணம் இதுதானா.

பின்னர் அடுத்த சீனில் அனைவரும் சாப்பிட உட்காருகிறார்கள் அப்போது மகா பரிமாற்கிறாள். சூர்யா மகாவை கூப்பிட்டு உட்கார்ந்து சாப்பிடு என  சொல்கிறார். அதற்கு மகா பரிமாற வேண்டாமா என கேட்கிறார். எல்லாம் பக்கத்துல தான்  இருக்கு சாப்பிட்டுபாங்க என்னா ஒரு கிலோமீட்டர் தொலைவிலியா இருக்கு என சொல்லி சாப்பிட சொல்கிறார். 

மகாவிற்கு சாப்பிடும் போது பொறை ஏறுகிறது அதற்கு சூர்யா தலையை தட்டி வீட்டு தண்ணீர் கொடுக்கிறார்.. மகா வேக வேகமாக சாப்பிட்டுட்டு எழுந்திருக்கும் போது அவரது புடவை சூர்யா கையில் மாட்டுகிறது. இருவரும் உடனே முகத்தை மாத்தி மாத்தி பார்த்துக் கொள்கின்றனர். அங்க இருக்கும் அனைவரும் ரொமான்ஸ் எல்லாம் ரூம்ல வச்சுக்கோங்க என சொல்கின்றனர். நடந்த அனைத்தையும் பார்த்து ராஜலட்சுமி கடுப்பாகிறாள். மேலும் ஐஸ்வர்யா சாப்பிடாமல் இருக்கா. பாட்டி ஏன் சாப்பிடவில்லை என கேட்கிறார் அதற்கு அவள் இந்த வீட்டில்  எல்லா மரியாதையும் மகாவுக்கு தான் என கோபமாக சொல்கிறார். அதற்கு பாட்டியோ நீ முழுகாம இருக்க உன்னால எந்த விரதமும்  எடுக்க முடியாது என  சமாதானப்படுத்துகிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.