Aaha Kalyanam today episode december 28 : இன்றைய எபிசோடில் ராகவ் வீட்டிற்கு வந்து என்னோட மருமகள் மகா இந்த வீட்ல தான் இருப்பா என்று சூர்யா மற்றும் ராஜலட்சுமிக்கு எதிராக பேசி மஹாவை ரூமுக்கு போ என்று சொல்லி பிறகு கார் டிரைவர் இடம் கோடீஸ்வரி தசாதரனை அவங்க வீட்ல போய் விட சொல்லிவிட்டார்.
வீட்டிற்கு வந்த கோடீஸ்வரியும் தசாதரனும் நம்ம மஹாவுக்காக இப்படிப்பட்ட நிலைமை வரணும், அவ ஐஸ்வர்யா மாதிரி கேட்டவலும் இல்ல பிரபா மாதிரி கேவகாரியும் இல்ல அவளுக்கு போய் இப்படி ஒரு வாழ்க்கை அமஞ்சி இருக்கே, மாப்பிள்ளை காலையில் வந்து சாப்பிட்டுட்டு நல்லா தான் பேசிட்டு போனாரு அதுக்குள்ள இப்படி மாறிட்டாரு என்று வருத்தப்படுகின்றனர்..
கேப்டனை தாக்கிய கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
அதற்கு பிரபா நீங்க அக்காவை கையோடு கூட்டிட்டு வந்திருக்கணும் அங்க இருக்கிறவங்க எல்லாம் மனுஷங்களே இல்ல அவங்க கூட விட்டுட்டு வந்து இருக்கீங்க நானா இருந்தா இப்படி ஒரு வாழ்க்கையே தேவையில்லைன்னு தூக்கி போட்டுட்டு வந்து இருப்பேன் என்று சொல்கிறார். அடுத்து ராகவ் ராஜலட்சுமி இடம் உனக்கு மகா மேல இன்னுமா கோபம் என்று கேட்க கல்யாணத்துல அவங்க நம்மளை ஏமாத்துனது..
என்னால மறக்கவே முடியாது, நான் மகாவ என்னைக்குமே என்னோட மருமகளா பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார் அதற்கு ராகவ் மகா நம்ம வீட்டுக்கு மருமகளா வரலைன்னா அவ இடத்துல ஐஸ்வர்யா இருந்திருப்பா அப்போ உனக்கு பரவா இல்லையா என்று கேட்க இருந்தாலுமே மகாவ என்னால ஏத்துக்க முடியாது.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்.. குரு இடத்தை பிடித்த சிஷியன்
இத பத்தி என்கிட்ட எத்தனை தடவை பேசினாலும் நா மாற மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்து மகா சூர்யாவிடம் வந்து என்னதான் இருந்தாலும் நான் பண்ணது தப்புதான், கோபத்துல பேசும்போது வார்த்தை கொஞ்சம் முத்தி வந்துடுச்சு என்று சொல்ல சூர்யா மகா மேல் இன்னும் கோபத்தில் பக்கத்தில் இருந்த ஜன்னலை ஓங்கி கையால் குத்தி காயமாக்கிக் கொள்கிறார்.
சூர்யா தூங்கிய பிறகு மகா சூர்யாவின் காயத்திற்கு மருந்து போடுகிறார். அடுத்து ராஜலட்சுமி இடமும் போய் மகா அத்தை உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல நீ எது பேசினாலும் நான் கேட்கிற மாதிரி இல்லை என்று முஞ்சால் அடித்த மாதிரி மகாவிடம் பேசுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது