Aaha Kalyanam today episode december 26 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ராஜலட்சுமியை எதிர்த்து பேசியதற்காக எங்க அம்மாவை நிக்க வச்சு கேள்வி கேட்கிறாயா என்று சூர்யா மகாவை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டார். மகா மழையில் நனைந்து கொண்டு வெளியே நிற்கிறார் அந்த நேரத்தில் ஐஸ்வர்யா கூலாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது காயத்ரி உன்னோட தங்கச்சி ஓட வாழ்க்கையே போக போற நிலைமையில் வெளியே நிக்கிற இந்த நேரத்துல சாப்பிட்டுட்டு இருக்க அவ எதனால வெளியே நிற்கிறா தெரியுமா,
உங்க அப்பா அம்மாவுக்கு உதவி செய்ய போய்தான் என்று சொல்ல ஐஸ்வர்யா நான் என்னமோ அவளை வெளியே தள்ளின மாதிரி பேசுறீங்க, இந்த வீட்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் சும்மா இருக்கும்போது நான் என்ன சொல்ல முடியும் ஒரு வயித்து பிள்ளைக்காரி சாப்பிடுவது தப்பா என்று ஐஸ்வர்யா சொல்கிறார்.. அடுத்து வேதாச்சலம் பானுமதியும் ராஜலட்சுமி இடம் வந்து என்னதான் இருந்தாலும் சூர்யா அப்படி பண்ணது தப்பு அவன் கிட்ட போய் பேசு என்று சொல்ல.
சீரியல்ல தான் உங்க அலப்பறை தாங்க முடியல இப்ப இந்தப் பக்கமும்மா.. அதுக்குன்னு பாம்பு டான்ஸ் வேறயா..
ராஜலட்சுமி நான் மகாவ ஒன்னும் வெளியே துரத்த சொல்லல இது அவனே எடுத்த முடிவு இதுல நான் ஒன்னும் அவன் கிட்ட சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.. அடுத்து விஜய் மகாவிடம் கொடை கொடுத்து நீங்க உள்ளவரலனாலும் இந்த கொடையாது புடிச்சிட்டு நில்லுங்க அண்ணி என்று சொல்ல விஜய் உங்களுக்கு என் மேல மரியாதை இருக்குன்னு தெரியும் எனக்கு உதவி பண்ண போயி நீங்க யார்கிட்டயும் திட்டு வாங்க வேணாம், நீங்க உள்ள போங்க என்று சொல்லிவிட்டார்.
பிறகு விஜய் கோடீஸ்வரிக்கு போன் பண்ணி வீட்டில் நடந்த எல்லாவற்றையும் சொல்ல கோடீஸ்வரி இந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுது தசாதரனை கூட்டிக்கொண்டு ஆட்டோவில் வேதாச்சலம் வீட்டிற்கு வந்து மகாவை பார்த்து என்ன நடந்தது என்று கேட்க உங்களுக்கு உதவி செய்ய வந்தது தப்புன்னு எல்லோரும் சேர்ந்து என்னை வெளியே அனுப்பிட்டாங்க என்று சொல்ல வா என்று மகாவை அழைச்சிட்டு போய் கதவை திறந்து எல்லோரும் இங்க தான் இருக்கீங்களா..
இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சிட்டு எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து இருக்கீங்க.. எப்பேர்ப்பட்ட குடும்பம் இது, நீங்க பண்ணது கொஞ்சமாவது சரியா என்று கேட்க ராஜலட்சுமி என்ன நடந்தது என்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்காதே என்று கோடீஸ்வரியை சொல்ல என்ன நடந்திருந்தாலும் நீங்க பண்ணது ரொம்ப தப்பு என்று கோடீஸ்வரி சொல்கிறது இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..