aaha kalyanam : ஆஹா கல்யாணம் சீரியலில் ராஜலட்சுமிக்கு எப்பொழுதுமே மகாவை பிடிக்காது மகா எது செய்தாலும் குத்தம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார். அது மட்டும் இல்லாமல் சூர்யா முதலில் திருமணம் செய்து கொள்ள இருந்தது வேறொரு பெண்ணை ஆனால் மகாவுக்கு முக்காடு போட்டு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அது மட்டும் இல்லாமல் அவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் ராஜலட்சுமிக்கு சுத்தமாக பிடிக்காது.
அதனால் ராஜலட்சுமி எப்போதும் மகாமேல் கோபமாகவே இருப்பார். அது மட்டும் இல்லாமல் தனது மகனே சேறு மிதித்து விட்டால் என அவள் மீது கோபம் கொண்டு ஓவர் சீன் கிரியேட் செய்து விடுகிறார்.
மேலும் மகாவிடம் ராஜலட்சுமி என் பையன் உனக்கு எப்படி இந்த பொங்கலுக்கு ஆசீர்வாதம் செய்வான் என்று பார்க்கிறேன் என சவால் விடுகிறார். அவர் கூறியது போல் சூர்யா மகாவிற்கு ஆசீர்வாதம் செய்ய மறுக்கிறார் இதனை பார்த்துக் கொண்டிருந்த தாத்தா மயங்கி விழுகிறார்.
அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது அப்பொழுது சூர்யாவிடம் நீ மகாவை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்குகிறார். அதனால் தாத்தா பார்க்கும் பொழுது சூர்யா மகாவை பாசமாக வைத்துக் கொள்வது போல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் மகா கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது சூர்யா பார்த்து ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார். இதனைப் பார்த்து ராஜலட்சுமி தனது மகன் மீது கடுப்பாகிறார்.
அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போது மகா அனைவருக்கும் பரிமாறுகிறாள் அப்போது சூர்யா நீயும் உட்கார்ந்து சாப்பிடு என மகாவிடம் கூறுகிறார். பின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மகாவிற்கு புரை ஏறுவதால் அவள் மீது அக்கறையாக இருக்கிறார். இதனை பார்த்து ராஜலட்சுமிக்கு அடி வயிறு பத்திக் கொண்டு எரிகிறது.
இதனை பார்த்த தாத்தா சந்தோஷமாக இருக்கிறார் இதெல்லாம் தாத்தாவின் சந்தோஷத்திற்காக தான் செய்கிறார் என்பது தெரியாமல் ராஜலட்சுமி சூர்யா மீது கோபப்படுகிறார். இத்துடன் இந்த பிரமோ வீடியோ முடிகிறது.