Aaha kalyanam serial October 3 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்கு ஆசையாக வருகிறார். ஆனால் கௌதம் ஐஸ்வர்யாவிடம் இப்பொழுது நமக்கு ஃபர்ஸ்ட் நைட் தேவை இல்லை எனக்கு உன்னை எப்போ நல்லா பார்த்து பண்ணு தோணுதோ அதுக்கு அப்புறம் நம்ம சேர்ந்து வாழலாம் எனக்கு இந்த பூ, ஊதுபத்தி ஸ்மெல்லே ஒத்துக்கல..
நான் என் ரூமுக்கு போய் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு கௌதம் ரூம்மை விட்டு வெளியே சென்று விட்டார்.. பிறகு ஐஸ்வர்யா நான் கர்ப்பமா இருக்கன்னு சொன்ன பொய்ய உண்மையாக்கலானு நினைச்சா இந்த கெளதம் இப்படி பண்றாரே என்று நினைத்து விட்டு தூங்குகிறார்.. மறுபக்கம் சூர்யாவும் மஹா பால் சொம்புடன் ரூமுக்கு வருவது போல் கனவு காண்கிறார்.
பிறகு மகா எப்பவும் போல ரூமுக்கு வருவதை பார்த்து என்ன ஏதாவது பிளான் ஓட வரியா என மஹாவிடம் கேட்கிறார். அதற்கு மகா பதிலுக்கு சூர்யாவிடம் நீங்க என்ன பிளான் வச்சிருக்கீங்க, ஏற்கனவே ஒரு நாள் ஸ்டோர் ரூம் வந்து என்கிட்ட தப்பு பண்ணீங்களே, அந்த தப்ப திரும்ப பண்ண போறீங்களா என்று கேட்கிறார்.. அடுத்த நாள் காலையில் சித்ராதேவி கெளதமிடம் என்ன ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் சூப்பரா நடந்துதா என்று கேட்க..
கௌதம் நீ வேற ஏம்மா கோபத்தை கிளப்புற நான் அவளை தனியா விட்டுட்டு என் ரூம்ல தான் போய் தூங்குனேன் என்று சொல்கிறார்.. பிறகு ஐஸ்வர்யா ரூம் கப்போர்ட்டில் ஒரு நெக்லஸ் இருந்தது அதனை கௌதம் நமக்காக தான் வாங்கி வச்சிருப்பாரு என்று நினைத்து போட்டுக் கொண்டு கீழே வருகிறார்..
அப்பொழுது ராஜலட்சுமி என்ன காலையிலேயே ஏதாவது அழகி போட்டிக்கு கிளம்பிட்டியா இப்படி மேக்கப் பண்ணிட்டு வந்திருக்க என்று கேட்க, அதுவா கௌதம் எனக்காக சர்ப்ரைஸா நெக்லஸ் வாங்கி வச்சிருந்தாரு அதான் போட்டுட்டு வந்தேன் கௌதம் பத்தி எனக்கு தெரியும் ஆபீஸ்லயும், வீட்லயும் அவர் எவ்வளவு முக்கியமான ஆளு, ஆபீஸ்ல எல்லா பொறுப்பையும் அவர் தான் பார்த்திருக்கிறார் என்று சொன்னாரு என்று ஐஸ்வர்யா சொல்ல..
எல்லோரும் கௌதம் ஐஸ்வர்யா கிட்ட எவ்வளவோ பொய் சொல்லி வச்சிருக்கான் போல என நக்கலா சிரிக்கின்றனர். பிறகு மஹாவை நான் காலைல எழுந்ததும் பெட் காஃபி குடிப்பல்ல எனக்கு காபி போட்டு எடுத்துட்டு வா என்று சொல்ல, மஹாவும் ஐஸ்வர்யாவுக்கு காபி போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கிறார்.
அதை குடித்துவிட்டு என்ன காபி கழனி தண்ணி மாதிரி இருக்கு என மகாவை ஐஸ்வர்யா திட்டுகிறார்.. மேலும் மகா ஐஸ்வர்யாவிடம் அக்கா கொஞ்சம் அடக்கி வாசி என்று சொல்ல நீ எனக்கு தங்கச்சி நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணாத என்றும் மகாவை திட்டுகிறார்..
பிறகு காயத்ரி மகாவிடம் என்ன உங்க அக்கா எப்படி இருக்கா, உன்கிட்ட மரியாதையாவே பேச மாட்டேங்குறா, ரெண்டு பேருமே எதிரெதிர் துருவமா இருக்கீங்க என்று கேட்கிறார் அதற்கு மகா அதெல்லாம் போக போக சரியாயிடுவாங்க என்று சப்போர்ட் பண்ணுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..