Aaha Kalyanam September 27 Promo : விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் என்ற சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது இதில் கௌதம் ஐஸ்வர்யாவை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிவிட்டு வெண்ணிலா என்ற பெண்ணுடன் கௌதமுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது அதனை மகா ஐஸ்வர்யாவை கூட்டிட்டு வந்து தடுத்து நிறுத்தி எங்க அக்கா கர்ப்பத்துக்கு பதில் சொல்லியே ஆகணும் என சொல்ல..
வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து கௌதம் ஐஸ்வர்யாவிற்கு கல்யாணம் நடத்த ஆரம்பித்தனர்.. ஆனால் இந்த கல்யாணம் கௌதம் மற்றும் அவருடைய அம்மா சித்ராதேவிக்கு மட்டும் பிடிக்காததால் கல்யாண நேரத்தில் கௌதம் கைலாஷ் என்பவரை வைத்து ஐஸ்வர்யாவை கடத்த சொல்லியிருந்தார்.
அதைப்போல் கைலாஸ் ஐஸ்வர்யாவை கடத்தி கல்யாணத்தை நிறுத்தினார் ஒரு வழியாக மகாவும், சூர்யாவும் ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் கௌதம் மற்றும் ஐஸ்வர்யா உடைய கல்யாணம் நடைபெற இருக்கின்ற நிலையில் ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவிற்கு ஒருவர் போன் பண்ணுகிறார் அதனை மகா எடுத்து அட்டென் பண்ண, ஐஸ்வர்யாவிடம் பேசுவது போல் நீ சொன்ன மாதிரி நீ கர்ப்பமா இருக்கேன்னு நான் சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுட்டேன் என்று சொல்கிறார் இதை கேட்டு மகா ரொம்பவும் அதிர்ச்சியாகி அப்ப ஐஸ்வர்யா கர்ப்பமா இல்லையா, இது தெரிஞ்சா என் வாழ்க்கை முழுக்க சூர்யா நம்மகிட்ட பேச மாட்டார்.
நான் என்ன பண்ணுவேன் என்று இந்த செய்தியை சொல்ல மகா மண மேடைக்கு ஓடி வருகிறார் ஆனால் அப்பொழுது ஐயர் தாலி கட்ட சொல்கிறார்.. இதை சொல்லி மகா கல்யாணத்தை நிறுத்துவாரா அல்லது கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் நடக்குமா என்பதை அடுத்த அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்..