Aaha kalyanam September 24 : சின்னத்திரையில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல்வேறு விதமான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகின்றன.. அதில் ஒரு சில முக்கிய சீரியல் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருந்து வருகின்றன அந்த வகையில் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்து “ஆஹா கல்யாணம்” என்ற சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது..
இது ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் தற்போது கூட கௌதம் ஐஸ்வர்யாவை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய விஷயம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வந்து கௌதம் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு கல்யாண ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இந்த கல்யாணம் கௌதம் மற்றும் அவருடைய அம்மா சித்ராதேவிக்கு மட்டும் விருப்பம் இல்லாததால்.. ஐஸ்வர்யாவை கடத்த ஆள் வைத்துள்ளனர் இந்நிலையில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் கல்யாண நேரம் நெருங்கி உள்ளது ஐயர் பொன்னை அழித்துவிட்டு வாருங்கள் என்று சொல்கிறார்.
ஆனால் ஐஸ்வர்யாவை ரூமில் காணவில்லை, கௌதம் கைலாசை வைத்து ஐஸ்வர்யாவை கடத்தி உள்ளார்.. மகா கோடீஸ்வரி எல்லாரும் என்ன பண்றது என தெரியாமல் இருக்கின்றனர். உடனே சித்ரா தேவி மண மேடையில் இருந்து கௌதமை எழுந்திரிடா, ஏற்கனவே சூர்யா கல்யாணத்துல ஓடிப்போனவ தான இப்ப திரும்பவும் ஓடி போய்ட்டா என கேவலமாக பேசுகிறார்..
உடனே வெங்கடாஜலம் சூர்யா நீயும் மகா கூட போய் ஐஸ்வர்யாவை தேடு என்று சொல்ல மகா, பிரபா, சூர்யா எல்லோரும் ஐஸ்வர்யாவை தேடி செல்கின்றனர்.. ஐஸ்வர்யாவை கடத்தி சென்ற கைலாஷ் இருவருக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்கிறார்.. இந்த கல்யாணத்தை நிறுத்தி மகா ஐஸ்வர்யாவை கூட்டிட்டு வந்து கௌதம் கூட திருமணம் நடத்தி வைப்பாரா இல்லை கௌதம் நினைத்தது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..