Aaha Kalyanam : விஜய் டிவி -ல் பிரபலமான சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் நடந்து வருவது என்னவென்றால்.. ஐஸ்வர்யா கர்பமாக இருப்பதாக பொய் சொல்லி கௌதமை திருமணம் செய்து உள்ளார் இந்த விஷயம் ஐஸ்வர்யா தங்கச்சி மகா -வுக்கு தெரியவர கல்யாணத்தை நிப்பாட்டா பார்க்கிறார்.
ஆனால் கல்யாணம் அரங்கேறி விடுகிறது அதன் பிறகு ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து ஏன் இப்படி பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு என கேட்க நான் கௌதமை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன் அது நடந்துருச்சு இந்த விஷயத்தை நீ போய் வெளியே சொன்னா நான் செத்துருவேன் என மிரட்டுகிறார்.
அதனால் மகாவும் உண்மையை சொல்லாமல் அப்படியே இருக்கிறார். இந்த நிலையில் புரோமோ வெளியாகி உள்ளது அதில் ஐஸ்வர்யா ரூமுக்கு சென்று பார்க்கும் போது ஒரு நெக்லஸ் இருக்கிறது. இதைப் பார்த்த ஐஸ்வர்யா நேத்து என்ன வெறுப்பேத்திட்டு இன்னைக்கு நெக்லஸ் வாங்கி வச்சிருக்கீங்களா என்று சொல்லுகிறார்.
பிறகு அதை போட்டு அழகு பார்த்துவிட்டு கீழே இறங்கி வருகிறார் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்திருக்கின்றனர். ஐஸ்வர்யா எல்லோரையும் பார்த்து ஹாய், குட் மார்னிங் என கூறுகிறார் ஐஸ்வர்யாவை பார்த்த ராஜலஷ்மி என்ன அழகி போட்டிக்க வந்திருக்க இப்படி மேக்கப் போட்டு இருக்க என கூறுகிறார்.
அப்பொழுது ஐஸ்வர்யா என்னுடைய கணவர் எனக்காக ஆசையா நெக்லஸ் வாங்கி வச்சிருக்காரு என கூறுகிறார். மேலும் கௌதம் என்ன சாதாரண கம்பெனி இருக்காரு.. உங்க கம்பெனியோட எம்டி அவர் தானே என் கிட்ட சொல்லி இருக்காரு என கூறுகிறார் இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர் கௌதம் பதட்டத்தில் இருக்கிறார்.