கௌதமை காப்பாத்த தன் மீது பழி போட்டுக் கொண்ட சூர்யா.! உண்மையை போட்டு உடைத்த மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam

Aaha Kalyanam : விஜய் டிவி தொலைக்காட்சியில் பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் தற்போது நடந்து வருவது என்னவென்றால்.. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி ஒரு வழியாக கௌதமை திருமணம் செய்து கொண்டார்.

இந்த விஷயம் மகாவுக்கு தெரிய வர ஐஸ்வர்யாவிடம் ஏன் இப்படி பொய் சொல்லிய கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் எல்லோரிடமும் சொல்ல போறேன் என்று சொல்ல.. நீ போய் சொன்னா நான் செத்துருவேன் என ஐஸ்வர்யா மிரட்டுகிறார். கல்யாணத்துக்கு அப்புறம் ஐஸ்வர்யா வீட்டில் திமிரும் தெனாவட்டுமாக இருந்து வருகிறார். இவருடைய ஒவ்வொரு செயலுமே சூர்யா குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அனன்யாவை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று அந்த இடத்தை பார்த்த விசித்ரா.! பிக்பாஸ் வீட்டில் இப்படியெல்லாம் நடக்குமா.?

இன்று கூட ஐஸ்வர்யா 80 ஆயிரத்திற்கு பொருள் வாங்கியது பலரையும் கடுப்பேத்தியது இது ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் கௌதம் ஐயப்பன் தாங்கல் பிரான்ச் மற்றும் ஒரு சில பிரான்சிகளில் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய காசை எடுத்து செலவு பண்ணி விடுகிறார் இது சூர்யாவுக்கு தெரியவரா அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் சூர்யாவின் தாத்தாவிற்கு உண்மை தெரிந்துள்ளது ஐயப்பன்தாங்கல் முப்பது லட்சம் பணத்தை தொழிலாளிக்கு கொடுக்காமல் யார் எடுத்து என்று கேட்க சூர்யா முன்வந்து நான் தான் செய்தேன் எனக் கூற இனி நீ எம் டி கிடையாது கௌதம் தான் எல்லா பொறுப்பையும் பார்த்து என சொல்லுகிறார்.

உங்க அக்கா பற்றிய உண்மையை என்கிட்ட மறைச்சிட்ட மகாவிடம் சண்டை போடும் சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

aaha kalyanam
aaha kalyanam

இதைக் கேட்ட மகா நான் உண்மையை சொல்லுகிறேன் இரண்டு பிரான்ச் பணம் 40 லட்சம் பணத்தை எடுத்தது என் வீட்டுக்காரர் இல்லை.. கௌதம் தான் எனக் கூறி உள்ளார் இதனால் கடுப்பான தாத்தா இனி உனக்கு எந்த ஷேர் பணமும் வராது இதுதான் நான் உனக்கு கொடுக்கும் தண்டனை என கூறியுள்ளார். இதனால் கௌதம், சித்ராதேவி, ஐஸ்வர்யா ஆகியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.