கல்யாணமாகி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளே ஆணவத்தில் ஆடும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

Aaha Kalyanam
Aaha Kalyanam

Aaha kalyanam serial September 29 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லாத விஷயத்தை அருண் போன் கால் மூலம் தெரிந்து கொண்டு மகா மணமேடைக்கு ஓடி வரும் பொழுது கௌதம் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி விட்டார்.. பிறகு கௌதம் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்.

அப்பொழுது சித்ராதேவி மட்டும் இந்த கல்யாணம் எனக்கு பிடிக்காத கல்யாணம் தான் அதனால் நான் ஆசிர்வாதம் பண்ணினா அது பொய்யா தான் இருக்கும் என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்காதீங்க என்று தெளிவாக கூறியுள்ளார்.. பிறகு ஐஸ்வர்யா அவங்க அப்பா, அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது இனி என் தொல்லை இல்லாமல் நீங்க சந்தோஷமா இருப்பீங்க இல்ல என்று சொல்ல..

கோடீஸ்வரியும் தசதரனும் நீ எவ்வளவோ தப்பு பண்ணி இருக்க இருந்தாலும் நீ எங்க பொண்ணு இல்லன்னு ஆயிடாது நீ இங்க நல்ல பேர் எடுக்கணும் என்று ஆசீர்வாதம் பண்ணுகின்றனர்.. அடுத்து மகா  ஐஸ்வர்யாவை தனியாக கூட்டிட்டு போய் நீ கர்ப்பமா இல்லை என்கிற விஷயம் எனக்கு தெரியும் அந்த டாக்டர் அருண் என்கிட்ட சொல்லிட்டாரு..

ஏன் அக்கா இப்படி பொய் சொன்ன, நீ சொன்ன பொய்ய நம்பி நானும் உன் கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ணிட்டேன் இப்ப இது தெரிஞ்சா சூர்யா என்னை மன்னிக்கவே மாட்டாரு, உன் கூட சேர்ந்து என் வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சு என்று கேட்க நான் அப்படி பொய் சொல்லலனா இப்ப கௌதம் கூட எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது அதனாலதான் நான் பொய் சொன்னா இதை நீ வேற யாருகிட்டயும் சொல்லக்கூடாது.

அப்படி சொன்னா என் பொனத்தை தான் நீ பார்க்கணும் என்று மகாவை ஐஸ்வர்யா மிரட்டுகிறார்.. பிறகு கௌதம் ஐஸ்வர்யாவிடம் உங்க  தங்கிச்சி மகா அவ கல்யாணத்தை  கிராண்டா பண்ணிக்கிட்டாங்க.. ஆனா நம்ம கல்யாணம் மட்டும் மீடியாவுக்கு தெரியக்கூடாது என சிம்பிளா நடத்த சொல்லிட்டாங்க.

உங்க மகா  கெட்டிகாரி தான் ஆனா  நீ அந்த விஷயத்துல வேஸ்ட் என்று சொல்ல ஐஸ்வர்யா இந்த வீட்டுக்கு வந்துட்டேன்ல இனிமே மகா ஆட்டத்தை நான் பாத்துக்குறேன், வேலைக்காரியோட கேவலமா அடக்கி வைக்கிறேன் என்று மனசுக்குள் நினைக்கிறார். இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.