அக்காவுக்கு சப்போர்ட் பண்ணி என் வாழ்க்கை போயிடுமோ.. உண்மை தெரிஞ்சு ஓடோடி வந்த மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha kalyanam september 28
Aaha kalyanam september 28

Aaha kalyanam September 28 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை கடத்தி  கைலாஷ் என்பவர் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு எல்லாம் செய்து தாலி கட்ட போற நேரத்தில் சூர்யாவும், மகாவும் அங்கு வந்து அந்த ஆட்களை அடித்து போட்டு ஐஸ்வர்யாவை மீட்டு காரில் ஐஸ்வர்யா மற்றும் கைலாஷ் இருவரையுமே அழைத்துக் கொண்டு மண மேடைக்கு வருகின்றனர்.

சித்ராதேவி முகூர்த்த நேரம் தான் முடிந்திருக்கும் இல்ல, ஏன் இன்னும் எல்லாம் உட்கார்ந்து இருக்கீங்க, ஓடிப்போன ஐஸ்வர்யா திரும்பி வந்தாலாம் கௌதமுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது இந்த கல்யாணம் நின்னுடுச்சு போங்க என்று சொல்ல..  அந்த நேரத்தில் சூர்யா அங்கு வந்து கல்யாணம் திரும்ப நடக்கும் என ஐஸ்வர்யாவை கூட்டிட்டு வந்துள்ளார்.

அப்போது கைலாஷை பார்த்து கௌதம் பயப்படுகிறார் எங்க நம்மளை போட்டு கொடுத்துட்டானோ என நினைக்கிறார். ஆனால் கைலாஷ் கௌதமை மாட்டி விடாமல் நான் ஐஸ்வர்யாவ பார்த்தவுடனே எனக்கு அப்படி ஒரு லவ் வந்துச்சு அதனால தான் அவளை கடத்தி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் என்று சொல்ல..

எல்லோரும் கோபப்பட்டு போலீசுக்கு போன் பண்ணி இவன புடிச்சுட்டு போக சொல்லுங்க என்று எல்லோரும் சொல்கின்றனர் ஆனால் சூர்யா அதெல்லாம் வேணாம் விடுங்க என்று அடுத்து எப்ப முகூர்த்த நேரம் இருக்கு என்று கேட்க அவர் ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் நல்ல முகூர்த்தம் இருக்கு என சொல்ல எல்லோரும் அப்பயே கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொல்கின்றனர்..

அடுத்து கோடீஸ்வரி, மகாவிடம் நான் ரூம்ல இருக்குற பேக்ல காசு முடிஞ்சு வச்சிருக்கேன் அதை ஓம குண்டத்துல போடணும் எடுத்துட்டு வா என்று சொல்ல மகா ரூமுக்கி  போய் பேக்கில் பார்க்கும் பொழுது அந்த பேக்கில் ஐஸ்வர்யா போன் ரிங் ஆகிறது.. அதை மகா அட்டென் பண்ணுகிறார் அப்பொழுது ஒருவர்   நீ சொன்ன மாதிரி நீ கர்ப்பமா இருக்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி நம்ப வச்சுட்டேன்..

இனிமே நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், நீ உண்மை என்னன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடு இல்லனா அந்த பொய்யை உண்மையாக்கு என்று ஐஸ்வர்யாவிடம் பேசுவது போல் சொல்லிவிட்டு அவர் போனை வைக்கிறார்.. இதைக் கேட்ட மகா  அக்கா இன்னும் திருந்தவே இல்லையா? எது எதுல பொய் சொல்லனும்னு இல்ல..

இது தெரியாம நான் வரே அக்காவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணிட்டேனே இது தெரிஞ்சா சூர்யா நம்மகிட்ட வாழ்நாள் முழுக்க பேச மாட்டாரே இந்த விஷயத்தை உடனே போய் எல்லார்கிட்டயும் சொல்லலாம் பெரியவங்களா சேர்ந்து என்ன முடிவு எடுக்குறாங்களோ எடுக்கட்டும் என மகா ஓடி வருகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..