Aaha Kalyanam September 27 : இன்றைய எபிசோடில் சூர்யாவும், மகாவும் ஐஸ்வர்யாவை தேடி காரில் சென்று கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ஒரு புரோகிதர் ஒருவர் வழிமறித்து ஒரு கல்யாணத்துக்கு அவசரமா போகணும் என்னை டிராப் பண்ணுங்க என்று கேட்க.. இந்த கல்யாணத்துக்கு நம்ம ஹெல்ப் பண்ணுனா நம்ம வீட்ல நின்னு போன கல்யாணத்துக்கு ஏதாவது வழி கிடைக்கும் என மகா அந்த புரோகிதரை காரில் உட்கார சொல்லி போகின்றனர்.
அந்தப் புரோகிதர் ஐஸ்வர்யா கைலாஸ் கல்யாணத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறார்.. அப்பொழுது மகா அந்த புரோகிதர் இடம் ஐஸ்வர்யா போட்டோவை காண்பித்து எங்க அக்கா கல்யாண நேரத்துல யாரோ கிட்னாப் பண்ணிட்டாங்க இவங்கள பாத்தீங்கன்னா எங்களுக்கு போன் பண்ணுங்க என சொல்ல.. சூர்யா நம்பர் கொடுக்கிறார். பிறகு புரோகிதர் கைலாஷ் உடைய கல்யாண இடம் வந்ததும் இறங்கி சென்று சென்றுவிட்டார்.
அங்கு மணப்பெண்ணை பார்த்தால் காரில் மகா காண்பித்த போட்டோவா இருப்பதால் உடனே புரோகிதர் சூர்யாவிற்கு போன் பண்ணுகிறார் அப்போது கைலாஷ் கல்யாணத்துக்கு டைம் ஆச்சு இந்த நேரத்துல ஆனால் சூர்யாவிற்கு ரிங் போய்விட்டது சூர்யாவும் போனை அட்டென்ட் பண்ணி உள்ளார்.. பிறகு புரோகிதர் அந்த போனை கட் பண்ணாமல் அப்படியே லைனில் வைத்து விட்டு மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சூர்யாவும் மகாவும் இப்ப நம்ம வழியில் பார்த்த புரோகிதர் நம்பர் வாங்கினார் இல்ல அவர்தான் தெரியாம போன் போட்டார் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ஐஸ்வர்யாவிடம் ஐயர் உங்க அப்பா அம்மா பெயர் என்ன சொல்லுங்க என்று கேட்க அம்மா பேரு கோடீஸ்வரி அப்பா பேரு தசாதரன் என்று சொல்ல ஐஸ்வர்யா தான் அங்க இருக்கா..
அத சொல்ல தான் நமக்கு புரோகிரர் போன் பண்ணி இருக்காரு வாங்க உடனே அந்த இடத்துக்கு போகலாம் என சூர்யா காரை திருப்பி ஐஸ்வர்யாவோட கல்யாண இடத்திற்கு செல்கிறார்.. ஐயர் சூர்யா மகா வரவரையும் பொறுமையா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.. பிறகு சூர்யாவும், மகாவும் அந்த இடத்திற்கு வருகின்றனர்.
கைலாஷ் உடைய ஆட்கள் சூர்யாவை அடிக்க பதிலுக்கு சூர்யா அவர்களை அடித்துக் கொண்டிருக்கிறார் மகாவும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து கைலாசை அடைகின்றனர் ஒரு வழியாக எல்லாத்தையும் அடித்து போட்டு விட்டு கைலாசிடம் ஏன் இப்படி பண்ண என்று கேட்க நான் ரெண்டு மூணு தடவை ஐஸ்வர்யாவை பார்த்து இருக்கேன்.
அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால கல்யாணம் பண்ணிக்கலாம்னு என்றுதான் கடத்தினேன் என சொல்கிறார் ஆனால் கைலாஷ் கௌதமை மாட்டி விடவில்லை பிறகு கைலாஷ் மற்றும் ஐஸ்வர்யா இரண்டு பேரையும் காரில் அழைத்துக் கொண்டு மகாவும் சூர்யாவும் வீட்டிற்கு வருகின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..