Aaha Kalyanam September 20 : இன்றைய எபிசோடில் கௌதம் கைலாஷ் என்பவரிடம் ஐஸ்வர்யாவை கடத்தி நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க, நீங்க கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.. அடுத்து சூர்யா இரவு தரையில் பெட்ஷீட் விரித்து படுத்ததால் கழுத்து புடிச்சுகிச்சு என்று மகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது விஜய் அங்கு வந்து என்ன அண்ணா என்று கேட்க எனக்கு கழுத்து பிடிச்சுகிச்சு டாக்டர் வர சொல்லு ஒரு இன்ஜெக்ஷன் போடணும் என்று சொல்ல மகா நான் தான் நைட்டே மேல வந்து பெட்ல படுங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா, ஒரு இன்ஜெக்ஷன்ல கழுத்து வலி சரியாயிடும்.. அதனால எவ்வளவு சைட் எஃபெக்ட் வரும் எனக்கு கை வைத்தியம் தெரியும் நானே சுளுக்கு எடுத்து விடுறேன் என விஜய்யை பிடிக்க சொல்லி சூர்யாவிற்கு மகா சுளுக்கு எடுத்து விட்டார்..
சூர்யாவுக்கும் கழுத்து வலி சரியாகிவிட்டது. பரவாயில்லையே கை வைத்தியம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க என்று மகாவிடம் சொல்கிறார் பிறகு கௌதம் கிட்ட சித்ரா தேவி நாளைக்கு கல்யாணம் நடக்கப்போவது என்ன பண்ணப் போற என்று கேட்க கௌதம் கல்யாணத்தை நிறுத்த நான் ஏற்பாடு பண்ணிட்டேன், அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அம்மா, இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல பிறகு சித்ராதேவி இந்த கல்யாணத்தை நிறுத்துனதுக்கு.
அப்புறம் அருந்ததிய விட வேற ஒரு பெரிய இடமா பார்த்து நம்ம சம்பந்தம் வச்சுக்கலாம் என்று சொல்கிறார்.. பிறகு மகா இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம் என்று தானே பிளான் போட்டுக்கிட்டு இருக்க, அதற்கு நான் விடமாட்டேன் என்று சொல்கிறார்.. பிறகு கோடீஸ்வரி வீட்டில் ஐஸ்வர்யா எல்லோரும் கல்யாணத்திற்கு கிளம்பிவிட்டனர்.. எப்படி போவது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கோடீஸ்வரன் அக்கா கார் எடுத்துட்டு வருகிறார்..
அவர் என்னோட நக செட்டு இங்க இருக்கு அத வாங்கிட்டு போலாம்னு தான் இப்படியே வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த நக செட்டை ஐஸ்வர்யா போட்டு வருகிறார் அதனை ஐஸ்வர்யா பெரியம்மா கேட்பதற்கு நான் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த நகை செட் தரும் பெரியம்மா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் கேட்டேனா வைர நகை செட் கௌதம் வாங்கி தருவாரு..
இந்த ஓல்டு மாடல் அப்புறம் எனக்கு எதுக்கு என்று சொல்கிறார்.. பிறகு கல்யாணம் மண்டபத்திற்கு எல்லோரும் வந்து விட்டனர் அங்கு ஐஸ்வர்யாவை கடத்த கௌதம் செட் பண்ண கைலாஷ் உடைய ஆள்களும் அங்கு கேட்டரிங் செய்பவர் போல அங்கு வந்திருக்கின்றனர். அப்பொழுது அவர்களிடம் சூர்யா நீங்க யார் என்று கேட்க, அதில் ஒருவர் கௌதம் தான் கேட்டரிங் எங்களை வர சொன்னாரு என்று சொல்ல..
சூர்யா கௌதம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் பிறகு இல்லை இவன்ட் மேனேஜர் ரவி எங்களை வர சொன்னாரு என்று மாற்றி சொல்வதும் பிறகு சூர்யா சரி வாங்க என்று சொல்லிவிட்டார் அடுத்து ஐஸ்வர்யா கோடீஸ்வரி எல்லோரும் மண்டபத்திற்கு வந்த இறங்குகின்றனர். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..