ஐஸ்வர்யாவின் கருவை கலைக்க நாடகமாடும் கௌதம்! மகா மேல் விழும் வீண் பழி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha Kalyanam September 15
Aaha Kalyanam September 15

Aaha Kalyanam September 15 :  இன்றைய எபிசோடில் கெளதம் ஐஸ்வர்யா வீட்டிற்கு வருகிறார்.. அவரைப் பார்த்ததும் பிரபா இங்க எதுக்கு நீங்க வந்தீங்க என்று கோபமாக பேசுகிறார் உடனே கோடீஸ்வரி அப்படிலாம் மரியாதை இல்லாம பேசாத என பிரபாவிடம் சொல்லிவிட்டு பிறகு கௌதமை வாங்க தம்பி என்று கூப்பிடுகிறார்..

கௌதம் ஐஸ்வர்யாவிடம் போய் எங்க அம்மா இந்த சம்பந்தத்தை ஏத்துக்கிட்டே ஆகணும் என்று வற்புறுத்தினதால் தான் நான் வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச இப்ப கூட நீ ஐஸ்வர்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த வீட்டை விட்டு போயிடனும் உனக்கு சொத்துல..

எந்த பங்கும் இல்லை அப்படி எல்லாம் மிரட்டுறாங்க இந்த கல்யாணம் வேணாம், அப்படி கல்யாணம் பண்ணா நம்ப ரெண்டு பேரும் வெளியே தான் போய் ஆகணும் முக்கியமா உன் தங்கச்சி மகா தான் என் கிட்ட சேலஞ்ச் பண்றாங்க உனக்கு சொத்து வேணுமா இல்ல ஐஸ்வர்யா வேணுமான்னு எல்லாத்துக்கும் காரணம் உன் தங்கச்சி மகா தான் என்றும் ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார்.

பிறகு ஐஸ்வர்யா எனக்கு சொத்தெல்லாம் முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம் நாம கல்யாணமும் பண்ணிக்கணும் அதே சமயம் அந்த வீட்டிலேயும் இருக்கணும் என்று சொல்கிறார் பிறகு கௌதம் போனதும் ஐஸ்வர்யா அந்த மகாவுக்கு இவ்வளவு திமிரா, நான் கல்யாணம் பண்ணிட்டு போய் மகாவ அந்த வீட்ல வேலைக்காரியோட மோசமாக நடத்துறேன் என்று சொல்கிறார்.

அடுத்து சூர்யா வீட்டில் மகாவை அவங்க சின்ன அத்தை கூட்டிட்டு போய் நீ பூஜை பண்ணு என சொல்வதற்கு மகா அதெல்லாம் வேணாம் ராஜேஸ்வரி அத்தைக்கு தெரிஞ்சா கோபப்படுவார்கள் என்று சொல்ல, நீ வந்து பூஜை பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்வதும் மகா பூஜை அறையில் போய் பூஜை பண்ணுகிறார் அப்பொழுது அதை பார்த்த ராஜேஸ்வரி எப்பயும் நான் தான் பூஜை பண்ணுவோம்.

உன்னை யாரு பூஜை ரூமுக்குள்ள விட்டது நீ இதெல்லாம் பண்ணக்கூடாது என கத்துகிறார் அதற்கு மகா உங்க பையனோட பொண்டாட்டியா இந்த வீட்ல இருக்கேன், அவர் ரூம்ல தான் இருக்கேன் கிச்சன்லயும் சமைக்கிறேன் இப்படி எல்லாத்துலயும் வந்துட்டா உங்கள மேடம் என்று கூப்பிடுவது மட்டும்தான் மாறல அதுவும் கூடிய சீக்கிரம் மாறிடும் என மகா பேசுகிறார்.

அடுத்து வெங்கடாசலம் புரோகிதர வரச் சொல்லி கௌதம் ஐஸ்வர்யா கல்யாணத்தை பத்தி பேசணும் அப்ப அவங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லிடுங்க என்றும் சொல்கிறார்.. பிறகு கிச்சனில் மகா சமைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சூர்யா வந்து எங்க அம்மாவ கோவப்படுதுறியா அவங்க தான் உன்ன பூஜை பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்களா.

நீ ஏன் பூஜை ரூமுக்கு போன என்று கத்துகிறார் பிறகு மேல ஒரு டப்பா இருக்கு அது எட்டுல எடுத்து குடுங்க என்று மகா கேட்க சூர்யாவுக்கும் எட்டவில்லை அதனால் மகாவை தூக்கி அந்த டப்பாவை எடுக்க வைக்கிறார். அப்பொழுது அதை பார்த்த சூர்யாவின் சித்தி இதெல்லாம் உங்க ரூமுக்குள்ள வச்சுக்க மாட்டீங்களா என்ன வெளியே ரொமான்ஸ் பண்றீங்க என்று கேட்கிறார்.

உடனே மகாவும் நான் உங்க பொண்டாட்டி என்றதால் தான் அந்த பாத்திரத்தை எடுக்க முடியலன்னு சொன்னதும் உடனே தூக்கி எடுத்தீங்க, ஏன் நீங்க ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வந்து கூட எடுத்து இருக்கலாமே என்று பேசிக் கொண்டிருக்கிறார் அடுத்து வெங்கடாசலம் வீட்டில் இருந்து கோடீஸ்வரிக்கு போன் பண்ணி கௌதம் ஐஸ்வர்யா கல்யாண விஷயத்தை பத்தி பேசணும் புரோகிதர் வர சொல்லி இருக்கோம். நீங்களும் வாங்க என்று கோடீஸ்வரியை கூப்பிடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.