Aaha kalyanam September 14 : இன்றைய எபிசோடில் மகாவை அலங்கரித்து பூவெல்லாம் வைத்து சூர்யா ரூமுக்கு அனுப்புகின்றனர் அதற்கு மகா இப்ப எதுக்கு இதெல்லாம் அத்தை சூர்யா எப்படியோ என்னை ஏத்துக்க மாட்டார் என்று சொல்கிறார் அதற்கு அவங்க சின்ன அத்தை நீ தான் உன் மேல தப்பு இல்ல நிரூபிச்சிட்ட இல்ல என்று சொல்லி பால் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
இன்னொரு பக்கம் சூர்யா ராஜலஷ்மி கிட்ட நான் மகா கிட்ட தோத்துட்டேன் என்று சொல்ல.. நீ அவளை ஏத்துக்கவே கூடாது இப்ப அவள் மேல தப்பு இல்லை என்கிற கர்வத்துல உன்கிட்ட வந்து பேசுவா ஆனா நீ மாறிடக்கூடாது அவ உனக்கு என்னைக்குமே ஏற்றவே இல்லை என்று சொல்லி அனுப்புகிறார்.
ரெண்டு பேரும் நினைத்தது போல் மகா ரூமுக்கு வந்ததும் சூர்யா கோபமாக தான் பேசுகிறார்.. அதற்கு மகா என்னைக்காவது ஒரு நாள் நீங்க மாறுவீங்க அதுவரை நான் காத்திருப்பேன் என்று சொல்கிறார்.. பிறகு விஜயிடம் அவங்க அம்மா சூர்யா மகாவை ஏத்துக்கவே மாட்டாங்க போல நம்ம ஏதாவது பண்ணனும் என்று சொல்ல என்னால முடிஞ்சத நான் அண்ணிக்கி பண்றேன் என்று சொல்கிறார்.
பிறகு கோடீஸ்வரி வீட்டில் பாவக்காய் குழம்பு வைக்கிறார் அதற்கு பிரபா என்னம்மா இது தான் எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா, ஒருவேளை நம்ம வீட்ல நடக்கிற கசப்பான சம்பவத்தை நினைச்சு இப்படி வைக்கிறியா என்று கேட்கிறார்.. பிறகு நமக்கு பிரச்சனை கொடுக்க தான் ஐஸ்வர்யான ஒன்னு இருக்கு என்று சொல்ல..
கௌதம் ஓட தாத்தா பாட்டி வந்து கௌதமுக்கு ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொன்னாங்க ஆனா கல்யாண தேதி இன்னும் சொல்லல அதனால பயமாவே இருக்கு என்று சொல்கிறார். அப்பொழுது ஐஸ்வர்யா வீட்டுக்கு கௌதம் காரில் வந்து இறங்குகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது நாளை கௌதம் ஐஸ்வர்யாவிடம் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்…