Aaha kalyanam september 13 : இன்றைய எபிசோடில் சித்ராதேவி கௌதமிடம் அந்த ஐஸ்வர்யாவை எப்படியாவது அபாஷன் பண்ண வச்சிடு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சொல்கிறார். பிறகு வெங்கடாசலம், சூர்யா, பாட்டி மூன்று பேரும் கோடீஸ்வரி வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.
அங்கு கோடீஸ்வரி அவர்களிடம் ஐஸ்வர்யா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்கிறார். அதற்கு வெங்கடாசலம் வயசு கோளாறுல இப்படி பண்ணிட்டாங்க அதனால கௌதம் ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் பண்ண எங்களுக்கு மனப்பூர்வ சம்மதம் என்று சொல்கின்றனர். அடுத்து வீட்டில் சித்ரா தேவியிடம் கௌதம் இப்படி ஒரு கேவலமான காரியம் பண்ணியிருக்கானே என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து கௌதம் ஐஸ்வர்யாவ கல்யாணம் பண்ணிக்கணும் நாங்க அவங்க வீட்ல பேசிட்டு வந்துட்டோம் என்று சொல்ல தராதரம் இல்லாத அவங்க வீட்ல எல்லாம் என்னால சம்மந்தம் வைத்துக்கொள்ள முடியாது என சித்ரா தேவி பிடிவாதமாக இருக்கிறார்.
மேலும் ஐஸ்வர்யாவை அபார்ஷன் பண்ண சொல்லு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனக் கௌதம் கிட்ட சொல்ல மகா சித்ராதேவி என் வாழ்க்கையை வீணாக்கின மாதிரி எங்க அக்கா வாழ்க்கையை வீணாக்க பாக்கறீங்களா எங்க அக்காவ கௌதம் கல்யாணம் பண்ணலன்னா நான் போலீஸ் கேஸ் கொடுப்பேன்.
கௌதம் உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்ட சொல்லுவேன் என பேசுவதற்கு இவளால தான் அம்மா எல்லா பிரச்சினையும் வந்தது என கௌதம் மகாவை பார்த்து சொல்ல சூர்யா என் பொண்டாட்டிய அவ இவ என்கிற என திட்டுகிறார் பிறகு ராஜலட்சுமி வெங்கடாசலம் எல்லோரும் மகா எங்க வீட்டு மருமகள் அவளை பேசறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்லை என திட்டுகின்றனர்..
பிறகு வெங்கடாசலம் நாங்க சொல்றதுக்கு நீ சம்மதிச்சா தான் எங்க வீட்ல இருக்கலாம் இல்லனா இந்த வீட்ல நீங்க இருக்க முடியாது என எல்லோரும் சொல்லுகிறார்கள். சித்ராதேவி என்ன சொல்வது என்று முழித்து கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது