Aaha kalyanam serial October 5 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா 80 ஆயிரத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்து இருக்கிறார். அதை டெலிவரி பாய் வீட்டிற்கு வந்து தர சித்ரா தேவி என்னால் பணம் கொடுக்க முடியாது, நீ தான ஆர்டர் பண்ண நீயே பணம் கொடுத்துக்கோ என்று சொல்ல, பிறகு பாட்டி கர்ப்பமா இருக்கிறவ ஆசைப்பட்டுட்டா..
நானே இந்த பணத்தை கொடுக்கிறேன் என்று பாட்டி காயத்ரி கையில் பணத்தை கொடுத்து சித்ரா தேவி இடம் கொடுக்க அவர் வேற வழியில்லாமல் டெலிவரி பாய் இடம் கொடுக்கிறார். பிறகு ஐஸ்வர்யா கார்டனில் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் வேலைக்காரி செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த தண்ணீர் தெரியாமல் ஐஸ்வர்யா மேல் பட உடனே உனக்கு அறிவில்லையா, என் மேல அழுக்கு தண்ணிய ஊத்தி இருக்கியே என ஐஸ்வர்யா திட்டுகிறார்.. அப்பொழுது மகா அங்கு வந்து அவர்களை இப்படியெல்லாம் திட்டக்கூடாது இப்ப என்ன தண்ணிதானப்பட்டது என்று சொல்கிறார் இதை தூரத்தில் இருந்து சூர்யா பார்த்துக் விட்டு மகாவிடம் உங்க அக்காவை பத்தி எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் என்கிட்ட மறைச்சிட்டீங்க ..
இல்ல என்று கேட்க மகா அக்கா கர்ப்பமா இல்லங்குற விஷயம் தான் சூர்யாவுக்கு தெரிஞ்சு நம்மளை கேட்கிறாரோ என பயப்படுகிறார், ஆனால் சூர்யா உங்க அக்கா கல்யாணம் பண்ணிட்டு வந்த அதுக்குள்ள ஓவர் பந்தா காமிக்குது உங்க அக்கா பிகைவியர் சுத்தமா சரியில்லை என்று சொல்கிறார்.. பிறகு ஆபீஸ் மேனேஜர் ராம் என்பவர் சூர்யாவிற்கு ஃபோன் பண்ணி கௌதம் அடையார் பிரான்சில் இருந்து ஒர்க்கர்ஸ்க்கு தரவேண்டிய பணத்தில் 10 லட்சம் எடுத்தாரு..
அதை இன்னும் தரவே இல்லை என்று சொல்ல சூர்யா சரி நான் கௌதம் கிட்ட பேசுறேன் என பிறகு கௌதமிடம் கல்யாணம் பண்ணா பொறுப்பா இருபண்ணு தானே உன்னை அடையாறு பிரான்ச பாத்துக்க சொன்னேன். ஆனா நீ 10 லட்சம் பணம் எடுத்துட்டு தரவே இல்ல அப்படி என்ன உனக்கு செலவு என்று கௌதமை திட்டிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.