Aaha kalyanam serial October 4 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரிக்கு பைனான்சியர் போன் பண்ணி எங்க வட்டி பணம் இன்னும் வரல, நீங்க ஒழுங்கா வட்டி கட்டுற மாதிரி தெரியல அதனால எனக்கு வட்டி வேணும் அசல் எடுத்துட்டு வந்து கட்டிடுங்க என்று சொல்கின்றனர். ஆனால் கோடீஸ்வரி வட்டியையே கட்ட முடியல..
அசல் இப்ப என்னால கட்ட முடியாது என்று சொல்ல நீங்க பணம் கட்டலான நான் வீட்டுக்கு இப்ப வருவேன், அந்த வீட்டை எனக்கே குடுத்துடுங்க உங்களை கூடிய சீக்கிரம் காலி பண்ணிடுவேன் என்று சொல்லிவிட்டு பிறகு நேராக வீட்டிற்கு வருகிறார்.. உடனே கோடீஸ்வரி அவங்க அக்காவுக்கும் போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லி விட்டு, சேட்டு வந்ததும் தலையிலே அவனை அடித்து மயக்கம் போட வைத்துவிட்டார்.
பிறகு கோடீஸ்வரி அவங்க அக்கா ஏண்டி இப்படி எல்லாம் பண்ற என்று கேட்க இவன் என்னை வீட்டை விட்டு போ, இந்த வீடு வேணும்னு கேட்கிறான் அதனால தான் இவன அடிச்சு ஒரு ஓரமா இங்கேயே போட்டுடலாம், அப்புறம் எப்படி பணம் கேட்பான் என்று சேட்டை அடித்தேன். மயக்கம் போட்ட செட்டை ஸ்டோர் ரூமில் இழுத்துட்டு போய் போட்டு கதவை மூடுகின்றனர்.
பிறகு மகா ஐஸ்வர்யாவிற்கு டீ போட்டு கொடுத்துவிட்டு அக்கா ரொம்ப ஓவரா பண்ணாத நம்ம வீட்ல இருந்த மாதிரி இங்க செல்லமா இருக்க முடியாது இங்க ஆளுக்கு ஒரு ஒரு வேலை எல்லாருமே செஞ்சாகணும், என்று சொல்ல நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணாத என இன்னும் கோபமாகவே ஐஸ்வர்யா மகாவிடம் பேசுகிறாள். பிறகு டெலிவரி பாய் இந்த மிஸ்ஸஸ் கெளதம் என்கின்ற பெயரில் 80,000 க்கு கேஷ் ஆன் டெலிவரி வந்திருக்கு என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர்
பிறகு ஐஸ்வர்யா வந்து நான்தான் ஆர்டர் பண்ணுனேன் என்று சொல்லச் சித்ராதேவி யாரு கேட்டு ஆர்டர் பண்ண என்ன திட்டுகிறார், அதற்கு ஐஸ்வர்யா நான் கௌதம் கிட்ட கேட்டேன். அவர்தான் ஆர்டர் பண்ணிக்கோன்னு சொன்னாரு. அவர் போனில் இருந்து ஆர்டர் போட்டேன் இப்ப அவர் இல்ல நீங்க தான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல சித்ரா தேவி யாருக்கு யார் அத்தை நீ தான் ஆர்டர் பண்ண நீயே பணம் கொடுத்துக்கோ என சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.