Aaha Kalyanam september 18 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரி அவரது கணவன் கிட்ட எழுந்திரிங்க சம்மந்தி வீட்டுக்கு போனும் என்று சொல்லுகிறார். பிறகு ஐஸ்வர்யா அவரது அப்பா அம்மா மூன்று பேரும் வெங்கடாசலம் வீட்டு வாசலில் நிற்கின்றனர் அவர்களை யாருமே வா என்று கூப்பிடாமல் இருக்கின்றனர்..
அப்பொழுது ராஜலட்சுமி சித்ராதேவியை போய் கூப்பிடு என்று சொல்ல சித்ராதேவி என் பையன் பண்ண தப்புக்கு உங்கள எல்லாம் கூப்பிட வேண்டியதாயிருக்கு என்று சொல்லிவிட்டு உள்ள கூப்பிடுகிறார்.. பிறகு சூர்யாவும் வாங்க என்று கூப்பிடுகிறார்.. அப்போது சித்ராதேவி கோடிஸ்வரியை பார்த்து உங்க பொண்ணுங்கள எந்த ஒரு செலவும் இல்லாம பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்றீங்க..
மகாவ அப்படித்தான் சூர்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க இப்ப உங்க ரெண்டாவது பொண்ணு ஐஸ்வர்யாவையும் இந்த வீட்டிலேயே தள்ளி விட்டுட்டீங்க, அடுத்து உங்க மூணாவது பொண்ணையும் இங்கதான் விஜயின் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு பாத்து கட்டி வச்சிருங்க ஆக மொத்தம் உங்க மூணு பொண்ணுங்களையும் செலவே இல்லாம பணக்கார இடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க என்று நக்கலாக பேசுகிறார்.
இதற்கு மகா எங்க அம்மா பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சாங்க ஆனா நீங்க தான் முக்காடு போட்டு கல்யாணம் பண்ணி வச்சீங்க, உங்க பையன் கௌதம் நல்லவனா அவனுக்கும் வெண்ணிலாவுக்கும் எங்கேஜ்மென்ட் செய்தியை மீடியால போட்டதும் எத்தனை பொண்ணுங்க போன் பண்ணாங்க..
அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்று சொல்கிறார்.. அடுத்து பிரபா கிரவுண்டில் கபடி விளையான்டு கிட்டு இருக்கிறாள் அப்பொழுது பிரபா டிமிலிருந்து ஒரு ஆள் வெளியேற அங்கிருந்த விஜய் அவனுக்கு பதில் நான் வரேன் உன் டீமுக்கு என்று சொல்லி பிரபாவுடன் விளையாடுகிறார்.
புரோகிதர் நாளை மறுநாளே நல்லா இருக்கு ரெண்டு பேருக்கும் அன்னைக்கே கல்யாணம் வச்சுக்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா உடைய அப்ப இவ்வளவு சீக்கிரம் எப்படி எல்லா வேலையும் செய்றது என்று கேட்க அதெல்லாம் பாத்துக்கலாம் நாளைக்கு நீங்க பொண்ண கூட்டிட்டு இங்க வந்துருங்க எல்லாத்தையும் நாங்களே பாத்துகிறோம் என்று வெங்கடாசலம் சொல்கிறார்.
அப்பொழுது கௌதம் எவ்வளவு பொய் சொல்லியும் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்துட்ட இல்ல, இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன் என மனசுக்குள் நினைக்கிறார். பிறகு காயத்ரி விஜய்க்கு போன் பண்ணி வீட்ல கௌதம் ஐஸ்வர்யா கல்யாண விஷயத்தைப் பற்றி பேசிட்டு இருக்கோம் நீ எங்க போனா என்று கேட்க பெரியவங்க நீங்க எல்லாம் பேசினா சரிதாம்மா என்று விஜய் சொல்கிறார்.
புரோகிதர் நாளை மறுநாளே கௌதம் ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னதை விஜய் இடம் காயத்ரி சொல்ல விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டு பிரபாவிடம் உங்க அக்காவுக்கு நாளன்னைக்கு கல்யாணம் என்று சந்தோஷத்தில் பிரபாவை தூக்கி சுற்றுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது…