Aaha Kalayanam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது தெரிய வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஐஸ்வர்யா பணக்கார வீட்டுப் பையனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து வருகிறார். இவருடைய தங்கை எவ்வளவு கூறியும் கேட்காமல் தனது சாமர்த்தியத்தனால் பணக்கார வீட்டுப் பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வேன் என சவால் விடுகிறார்.
ஆனால் அதற்கு அவருடைய தங்கை வா நம்ப ரெண்டு பேரும் ரோட்ல நடந்து போகும் அப்ப தெரியும் நீ வாழ்வது சாமர்த்தியமான வாழ்க்கையா இல்ல அசிங்கமான வாழ்க்கையா என்றும் எல்லாரும் உன்னை பத்தி எவ்வளவு அசிங்கமா நினைக்கிறாங்க என்பது தெரியவரும் என கையைப் பிடித்து இழுக்க ஐஸ்வர்யா வர முடியாது என்று கூறி விடுகிறார்.
மேலும் மகா அக்கா சொல்வதைக் கேட்டுக் கொண்டு வரப்போற பையனை கல்யாணம் செஞ்சுக்க என அட்வைஸ் கூறிவிட்டு செல்ல தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோடீஸ்வரி ஐஸ்வர்யாவை அலங்கரித்து அழைத்து வருகிறார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் அமர்ந்திருக்க ஐஸ்வர்யா அனைவருக்கும் வணக்கம் சொல்ல தலை நிமிர்ந்து மாப்பிள்ளையை பாரு என கூறுகின்றனர். அந்த நேரத்தில் மயக்கம் போட்டு அனைவரும் முன்பும் ஐஸ்வர்யா விழ பதட்டமடைகிறார்கள்.
பிறகு வந்த மாப்பிள்ளை என்ன ஆச்சு என்று பார்க்க அனைவரிடமும் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது ஐஸ்வர்யா கர்ப்பமா இருக்கா என்று கூற பிறகு அனைவரும் கிளம்பி விடுகின்றனர். இவ்வாறு ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் கோடீஸ்வரி பேர் அதிர்ச்சியில் உறைகிறார். இதோடு பிரமோ நிறைவடைகிறது.