தடைகளை தாண்டி ஐஸ்வர்யா-கௌதமின் திருமணம் நடைபெறுமா? ஆஹா கல்யாணம் இந்த வார ப்ரோமோ..

aaha kalyanam 1
aaha kalyanam 1

Aaha Kalayanam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது பல தடைகளை தாண்டி கௌதம் ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

தனது திருமணத்தை ஐஸ்வர்யா நிறுத்திவிட்டதால் கோபத்தில் கௌதம் இருந்து வருகிறார். ஆனால் கௌதம் செய்த பித்தலாட்ட வேலைகள் அனைவருக்கும் தெரிய வர சூர்யா கௌதமை அடித்து விடுகிறார் பிறகு கௌதம் ஐஸ்வர்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

எனவே விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர்கள் நினைக்க ஆனால் கௌதம் மற்றும் அவருடைய அம்மாவிற்கு இந்த திருமணம் சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே இதன் காரணத்தினால் எப்படியாவது கௌதம் ஐஸ்வர்யாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்து வருகின்றனர்.

இவ்வாறு திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக கௌதம் அதிரடியாக முடிவு செய்திருக்கும் நிலையில் இதனை அடுத்து இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேதியை குறிச்சு கொடுக்கணும் என்று கோடீஸ்வரர் கேட்கிறார்.

மறுபுறம் கௌதமின் அம்மா இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது இன்று மிகவும் கோபத்துடன் கூறுகிறார். இதனை அடுத்து கௌதம் ரவுடியை நேரில் சந்தித்து ஐஸ்வர்யாவின் போட்டோவை காமித்து பொண்ணை தூக்கி விட வேண்டும் என்று சொல்ல தூக்கி விடலாம் என அந்த ரவுடி கூறுகிறார்.

திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஐஸ்வர்யா ரூமில் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் ரவுடிகள் ஜூஸ் கொடுப்பது போல் வந்து கர்ச்சிப்பில் இருந்த மயக்கம் மருந்தால் ஐஸ்வர்யாவை மயங்க வைத்து தூக்கி செல்கின்றனர்.

பிறகு மகா அம்மாவிடம் அம்மா அக்கா எங்கேயும் காணும் என்று சொல்ல அனைவரும் பதட்டத்துடன் ஐஸ்வர்யாவை தேடுகின்றனர். பிறகு பாட்டியிடம் அக்காவை காணவில்லை எனக் கூற மயங்கி விழுகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.